ஜாலியன் வாலாபாக் படுகொலை – 1919

ஜாலியன் வாலாபாக் படுகொலை பஞ்சாப் கொடுமை 1919

  • 1919 ஏப்ரல் 13ல், அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன.
  • சத்தியபால், சாய்புதீன் கிச்லு ஆகியோரைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2000துக்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக குழுமி இருந்தனர்.
  • பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டையரும், ராணுவக் கமாண்டராக ஜெனரல் ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர்.
  • மக்களைக் எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுடுமாறு ஜெனரல் ரெஜினால்டு டையர் உத்தரவிட்டார்.
  • அரசு தகவல்களின்படி உயிரிழப்புகள் 379 என்ற எண்ணிக்கையில் இருத்து.
  • ராணுவச் சட்டம் பஞ்சாப் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரங்களை சந்தித்தனர்.
  • ரௌலட் சட்டத்துக்கு எதிராகப் பம்பாய், கல்கத்தா, டெல்லி, லாகூர் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டன.

ஜாலியன் வாலாபாக் படுகொலை சாட்சி – சீக்கிய உதம்சிங்

  • ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்க்கப்பட்ட சீக்கிய பதின் பருவ இளைஞரான உதம்சிங் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வை தனது கண்களால் கண்டார்.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குப் பழி தீர்க்கும் விதமாக 1940 மார்ச் 30ல் லண்டனின் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஓ டையரை உதம்சிங் படுகொலை செய்தார்.
  • லண்டனின் பெண்டோன் வில்லே சிறையில் உதம்சிங் தூக்கிலிடப்பட்டார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை – இரவீந்திரநாத் தாகூர் தனது அரசப் பட்டத்தை துறந்தல்

  • ஜாலியன் வாலாபாக் கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரவீந்திரநாத் தாகூர் உட்பட பல பிரபலங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களைத் துறந்தனர்.
  • ஜாலியன் வாலாபாக் கொடுமை எதிராக எதிர்ப்புக் கடிதத்தை 1919 மே 31 ஆம் தேதி அரசப் பிரதிநிதிக்கு (வைசிராய்) அனுப்பிய தாகூர் எழுதினார்.
  • இணக்கமற்ற சூழல் நிலவும் வேளையில் அவமானத்தின் சின்னமாக இந்த மதிப்புக்குரிய பட்டம் திகழ்கிறது. மனிதர்களாகக் கூடக் கருத முடியாத நிலையில் மதிப்பிழந்து போன எனது நாட்டு மக்களுக்கு ஆதரவாக எனது தரப்பில் நான் மேற்கொள்ளும் செயலாக, எனக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்புப் பட்டங்களையும் திரும்ப ஒப்படைக்கிறேன்.” என்று தாகூர் எழுதினார்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!