ரௌலட் சட்டம் – 1919

  • 1919 மார்ச் 18ல் ரௌலட் சட்டம் கொன்டுவரப்பட்டது.
  • அடக்குமுறைச் சட்டங்களில் மிகக் கொடுமையான சட்டமாக ரௌலட் சட்டம் அமைந்தது.
  • அரசுக்கு எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் அதிகாரமளித்தது.

 ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்

  • காந்தியடிகள் நிறுவிய சத்தியாகிரக சபை, இந்தச் சட்டத்தை மீறுவது என்று முதன் முதலாக உறுதி ஏற்றது.
  • கூட்டங்கள், அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பது, பள்ளிகளைப் புறக்கணிப்பது, கள்ளுக் கடைகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மனுக்கள், போராட்டங்கள் ஆகியப் பழமையான ஆர்ப்பாட்ட முறைகளை கைவிட்டு புதுமையான முறை பின்பற்றப்பட்டது.
  • தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் பெரும் பங்கேற்புடன் சத்தியாகிரகம் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டது.
  • ரௌலட் சட்ட எதிர்ப்பின் அடையாளமாகவும் பின்னர் தேசியவாதிகளின் உடையாகவும் காதி மாறிப்போனது.
  • மக்கள் விழிப்புணர்வு அடைந்து, அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினால் தான் இந்தியாவில் சுயராஜ்யம் என்பது நடைமுறைக்கு வரும் என்று காந்தியடிகள் கருதினார்.
  • 1919 மார்ச்ஏப்ரல் மாதங்களில் ரௌலட் சட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தத்தைக் கடைபிடிக்குமாறு காந்தியடிகள் அழைப்பு விடுத்தவுடன் நாடு முழுவதும் ஊக்கம் பிறந்தது.
  • காந்தியடிகள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த கிலாபத் இயக்கத்தையும் ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைத்தார்.

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!