ஒளவையார்
- அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றார், அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர்.
- நமக்குக் கிடைத்துள்ள ஔவை பாடிய 59 பாடல்கள் விபரம்
- அகநானூற்றில் – 4
- நற்றிணை – 7
- குறுந்தொகையில் – 15
- புறநானூற்றில் – 33
மொத்தம் – 59
பாடல் – 206
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் * *
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அற
கொல்? என் அறியலன் கொல்? *
பா வகை : நேரிசை ஆசிரியபா
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந்தலை
உலகமும் அன்றே அதனால்
காவினெம் கலனே. சுருக்கினெம் கலப்பை, மரங்கொல் தச்சன் * *
கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே*
சொல்லும் பொருளும்
- வாயிலோயே – வாயில் காப்போனே
- வள்ளியோர் – வள்ளல்கள்
- வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
- வித்தி – விதைத்து
- உள்ளியது – நினைத்தது
- உரன் – வலிமை
- வறுந்தலை – வெறுமையான இடம்
- காவினெம் – கட்டிக்கொள்ளுதல்
- கலன் – யாழ்
- மழு – கோடரி
- கலப்பை – கருவிகளை வைக்கும் பை
பாடலின் பொருள்
- வாயில் காவலனே! வாயில் காவலனே!
- புலவர்களாகிய எங்களைப் போன்றவர்களின் வாழ்நிலை. வள்ளல்களை அணுகி அவர்தம் செவிகளில் அறிவாரந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது
- அதேவேளையில் அவ்வள்ளல்கள் பற்றித் தாம் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டுமே என நினைந்து வருந்தும் தன்மையைக் கொண்டது.
- பரிசிலர்களை அடைக்காத காவலனே! விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ?
- அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை நிலையில் உள்ளார் வாழ்கின்றனர் என்னும் நினைப்புப் போலும் இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை.
- இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை. எங்களை அறிந்து பரிசில் தரப் பலபேர் உள்ளனர். ஆகவே, எம் யாழினை எடுத்துக்கொண்டோம்; கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக்கொண்டோம். மரம்வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடாரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும் ?
- அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுககும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்.
பாடலில் உள்ள உவமைகள்
- பரிசிலர்க்குச் – சிறுவர்
- கல்விக்குக் – கோடாரி
- போகும் திசைக்குக் – காடு
- உணவுக்குக் – காட்டில் உள்ள மரங்கள்.
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————