புறநானூறு- 2 காவற்பெண்டு

காவற்பெண்டு

  • காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர்.
  • சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் காவற்பெண்டு.
  • கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்கவர்.
  • சங்ககாலப் பெண்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் காவற்பெண்டு பாடியுள்ளார்.
  • காவற்பெண்டு பாடியது ஒரே ஒரு (1) பாடல் அது புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது

பாடல் –86

சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன் யாண்டு உளனோ என  வினவுதி

என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்

ஒரும் புலி சேர்ந்து போகிய கல்அளை போல ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே *

– காவற்பெண்டு

சொல்லும் பொருளும்

  • சிற்றில்  –  சிறு வீடு
  • யாண்டு – எங்கே
  • கல் அளை – கற்குகை
  • ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

பாடலின் பொருள்

சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, ‘அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?’ என்று கேட்டாள்

‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக் கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய்.

அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது

அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும்.போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.

பாடலின் சுருக்கம்

எம் சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று என் மகன் எங்கே என்று வினவும் பெண்ணே! அவனிருக்கும் இடம் யானறியேன், புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்ற வயிறு இங்குள்ளது. ஒருவேளை அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும்!

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!