சிறுபாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத் தத்தனார்.
- ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் சிறுபாணாற்றுப்படை.
- சிறுபாணாற்றுப்படை 269 அடிகளை உடைய நூல்.
- சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று..
- பரிசுப்பெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட பாண்னை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக சிறுபாணாற்றுப்படை அமைந்துள்ளது.
- வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
சிறுபாணன் பயணம்
- சிறுபாணன் பயணம் பற்றிய குறிப்பை மா.இராசமாணிக்கனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம் – நல்லூர்
- சிறுபாணன் பயணம் முடித்த இடம் – கிடங்கில் (திண்டிவனம்)
- சிறுபாணன் சென்ற வழி
- நல்லூர் 8-கல் எயிற்பட்டினம் (மரக்காணம்) 12- கல் வேலூர் (உப்பு வேலூர்) 11-கல் – ஆமூர் (நல்லாமூர்) 6 -கல்
ஈகை செயல் பழமொழி நானூறு
- ஈகை செயலே பெருமைக்குப் புகழ் சேர்ப்பது என்பதை, ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி‘ என்று பழமொழி நானூறு கூறுகிறது. **
வள்ளல் குமணன் – முதிர மலை
- புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல் குமணன்.
- குமணன் முதிர மலையை (பழனி மலைத்தொடர்களில் ஒன்று) ஆட்சி செய்த குறுநில மன்னன் ஆவான்.
- புறநானூறு 158- 164, 165 ஆகிய பாடல்களிலும் குமணனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
குமணனும் இளங்குமணனும்
- குமணன் தன் தம்பியாகிய இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் குமணன் காட்டில் மறைந்து வாழ்ந்தான்.
- இளங்குமணன் தன் அண்ணன் குமணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான்.
குமணனும் பெருந்தலைச் சாத்தனாரும்
- தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் குமணன் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளால், “தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு” குமணன் கேட்டுக் கொண்டான்.
- இதனால் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று குமணன் போற்றப்படுகிறான்.
கடை ஏழு வள்ளல்களும் – ஆண்ட நாடுகளும்
- மலையமான திருமுடிக்காரி – மலாடு, திருக்கோயிலூர், தென்பெண்ணை, விழுப்புரம் மாவட்டம்,
- நல்லியக்கோடன் – ஓய்மா நாடு திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்
- அதியமான் நெடுமான் அஞ்சி – பூரிக்கல், தகடூர், தருமபுரி மாவட்டம் (ஔவைக்கு பூரிக்கல் நெல்லிக்கனி)
- ஓரி (வல்வில் ஓரி) – கொல்லி மலை, நாமக்கல் மாவட்டம்
- நள்ளி (நளிமலை நாடன்) – நெடுங்கோடு மலை, ஊட்டி, உதகமண்டலம், கோவை மாவட்டம்
- போகன் – பொதினி, ஆவினன்குடி, பழனி, திண்டுக்கல் மாவட்டம்
- குமணன் – முதிர மலை, பழனி மலைத்தொடர்களில் ஒன்று. திண்டுக்கல் மாவட்டம்
- பாரி – பறம்புமலை, பிரான்மலை 300 ஊர்கள், சிவகங்கை மவட்டம், சிங்கம்புணரி
- ஆய் அண்டிரன் – பொதிய மலை, அகத்தியர் மலை, திருநெல்வேலி குற்றாலம், பாபநாசம்
அக்கால ஊர் பெயரும் தற்கால பகுதியும்
- கிடங்கில் – திண்டிவனம்
- ஓய்மா நாடு – திண்டிவனம்
- எயிற்பட்டினம் – மரக்காணம்
- மலாடு – விழுப்புரம்
- வேலூர் – உப்பு வேலூர்
- தகடூர், பூரிக்கல் – தருமபுரி
- கொல்லி மலை – நாமக்கல்
- நெடுங்கோடு மலை, ஊட்டி – கோவை
- பொதினி, ஆவினன்குடி, பழனி – திண்டுக்கல்
- முதிர மலை, பழனி மலைத்தொடர் – திண்டுக்கல்
- பறம்புமலை, பிரான்மலை – சிவகங்கை சிங்கம்புணரி
- பொதிய மலை, அகத்தியர் மலை – திருநெல்வேலி குற்றாலம்
வள்ளல்களும் பாடப்பட்டுள்ள பாடல் எண்களும்
- போகன் – 84-87
- பாரி – 87-91
- மலையமான் திருமுடிக்காரி – 91-95
- ஆய் அண்டிரன் -95-99
- அதியமான் நெடுமான் அஞ்சி -99-103
- நள்ளி (நளிமலை நாடன்) – 103-107
- ஓரி (வல்வில் ஓரி) – 107-111
- நல்லியக்கோடன் – 111 – 115
- குமணன் – 158-164, 165
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————