சிறுபாணாற்றுப்படை – 3 பாரி

பாரி – பறம்புமலை, பிரான்மலை 300 ஊர்கள், சிவகங்கை மவட்டம், சிங்கம்புணரி

பறம்பு மலை -பாரி – (87-91)

பாடல்

சுரும்பு உண நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச் சிறுவீ

முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள் அருவி வீழும் சாரல் பறம்பின் கோமான் பாரியும்

சொல்லும் பொருளும்

பறம்பு    –  பறம்பு மலை

சுரும்பு   – வண்டு

பிறங்கு – விளங்கும்

பாடலின் பொருள்

வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட மலர்களைச் சிந்தும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடுவழியில்,

கொம்பின்றித் தவித்துக்கொண்டிருந்த மலர்களையுடைய முல்லைக்கொடியொன்று பற்றிப்படரத் தான் ஏறி வந்த பெரிய தேரினை ஈந்தவன் பாரி. அவன் வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன் பாரி.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!