மாற்றம் வேண்டுவோர்(Pro-changers)
- ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்றதை அடுத்து புதிய வழியில் சுயராஜ்ய கட்சியை சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் அறிவித்தனர்.
- தீவிர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் சுயராஜ்யம் வேண்டுவோர் குழு விரும்பினார்கள்.
- சீர்திருத்தம் பெற்ற சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் சுயராஜ்யம் வேண்டுவோர் வெளிப்படுத்தினர்.
- மாற்றம் வேண்டுவோர்(Pro-changers) என்று சுயராஜ்யம் கட்சி அழைக்கப்பட்டது.
- மாற்றம் வேண்டுவோர் சுயராஜ்ய கட்சியை காங்கிரஸின் ஒரு பகுதியாகத் தொடங்கினார்கள்.
- தமிழ்நாட்டில், சுயராஜ்ய கட்சியில் எஸ். சத்தியமூர்த்தி இணைந்தார்.
மாற்றம் விரும்பாதோர்(No-changers)
- சட்டப்பேரவை நுழைவை எதிர்த்த மற்றொரு குழு காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
- எந்த மாற்றமும் தேவையில்லை என்று மாற்றம் விரும்பாதோர்(No-changers) அழைக்கப்பட்டனர்.
- சட்டப்பேரவை நுழைவை எதிர்த்த குழுவுக்கு காந்தி, இராஜாஜி, வல்லபாய் பட்டேல், இராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமை ஏற்றனர்.
- தேர்தல் அரசியல் தேசியவாதிகளின் கவனத்தைத் திசை திருப்பும் என்றும் மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் இருந்து அவர்கள் விலகிச் செல்ல வைத்துவிடும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
- காந்தியடிகளின் ஆக்கப் பணிகளைத் தொடர அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
மாற்றம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் விரும்பாதோர் இடையே சமாதானம்
- இரண்டு குழுக்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தப்பட்டு காங்கிரஸ் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு காந்தியடிகள் ஆக்கப் பணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
- காந்தியடிகள் தலைமையின் கீழ் இரண்டு குழுக்களும், ஒரு குழுவுக்கு மற்றொரு குழுவின் செயல்பாடுகள் துணை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
சுயராஜ்ய கட்சியின் தேர்தல் வெற்றி
- மத்திய சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் சுயராஜ்ய கட்சி பங்கேற்று 101 இடங்களில் 42 இடங்களைக் கைப்பற்றியது.
- மத்திய சட்டப்பேரவையில், மற்ற உறுப்பினர்களின் ஆதரவோடு காலனி ஆதிக்க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்களைத் தீவிரமாக எதிர்தது.
- 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் குறைபாடுகள் குறித்து தெரிவிப்பதிலும் வெற்றி அடைந்தனர்.
சுயராஜ்ய கட்சியின் அழிவு
- காலம் செல்லச் செல்ல அவர்களுடைய முயற்சிகளும் ஊக்கமும் குறைந்தது.
- அரசு நியமித்த பல குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதை ஏற்றனர்.
- சுயராஜ்ய கட்சி பிரிவினை வாதத்தால் பாதிப்படைந்தது.
- இந்து ஆதரவு குழுவினர் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
- முஸ்லிம் அடிப்படைவாதிகளும் மதவாத உணர்வுகளைப் பரப்பத் தொடங்கினர்.
- இடதுசாரித் தீவிரத் தன்மை கொண்டவர்களின் செயல்பாடுகளால் காந்தியடிகள் வேதனை அடைந்தார்.
- மதவாதப் போக்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் காந்தியடிகள் 21 நாட்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.