சைமன் குழு – நேரு அறிக்கை- லாகூர் காங்கிரஸ் மாநாடு

சைமன் குழு

  • 1929-30ஆம் ஆண்டில் அரசியல் சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது.
  • 1919 இந்திய கவுன்சில்கள் சட்டம் ஆராய வந்த குழுசைமன் குழு
  • அரசியல் சாசன சீர்திருத்த சட்ட உருவாக்கக் குழு அதன் தலைவரான சைமனின் பெயரில் அமைந்தது.
  • சைமனின் குழுவில் வெள்ளையர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். அது இந்தியர்களுக்கு அவமானமாகக் கருதப்பட்டது.
  • 1927ல் மதராஸ் காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் சைமன் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.
  • சைமன் குழுவை புறக்கணிக்கும் முடிவுக்கு இந்து மகா சபையும் முஸ்லிம் லீக் அமைப்பும் ஆதரவு தெரிவித்தன.
  • இந்தியா தொடர்பான காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு சவால் விடுக்க பெரும்பான்மையான கட்சிகள் ஒப்புக்கொண்டன.

கல்கத்தா காங்கிரஸ் மாநாடு – 1928

  • 1928ல் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் மோதிலால் நேரு.
  • டிசம்பர் 1928ல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டின் போது, இடதுசாரிகளை சாந்தப்படுத்தும் முயற்சியாக 1929ல் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

கல்கத்தா காங்கிரஸ் மாநாடுசைமன் குழுவை புறக்கணிக்கும் முடிவுமோதிலால் நேரு அறிக்கை – 1928

  • சைமன் குழுவை புறக்கணிக்கும் முடிவாக கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மோதிலால் நேரு அறிக்கை வெளியானது.
  • வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் என்ற விஷயத்தை டிசம்பர் 1928ல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிகளும் ஏற்கத் தவறின.

கல்கத்தா காங்கிரஸ் மாநாடு1929

  • 1929ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் ஜவஹர்லால் நேரு.

சைமனே திரும்பிச் செல் – 1929

  • சைமன் குழு எங்குச் சென்றாலும் எப்போது சென்றாலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
  • 1929ல் சைமனே திரும்பிப் போ முழக்கம் காதைப் பிளந்தது.

லாகூர் காங்கிரஸ் மாநாடு – பூரண சுயராஜ்ஜிய முழக்கம் 1929

  • இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
  • முழுமையான சுதந்திரம் அடைவது என்பதைக் குறிக்கோளாகக் காங்கிரஸ் கட்சி லாகூர் மாநாட்டில் அறிவித்தது.
  • 1929 டிசம்பர் 31ல் லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
  • லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
  • காந்தியடிகளின் தலைமையில் சட்டமறுப்பு இயக்கம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!