டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்

  • 1920களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப் புள்ளியாக டாக்டர் அம்பேத்கர் விளங்கினார்.
  • நாட்டின் மையப் பகுதியில் மஹர் சாதியில் ராணுவ வீரரின் மகனாகப் அம்பேத்கர் பிறந்தார்.
  • மஹர் சாதியில் 10ம் வகுப்பை நிறைவு செய்த முதலாமவராகத் டாக்டர் அம்பேத்கர் திகழ்ந்தார்.
  • அம்பேத்கர் புதிய பத்திரிக்கைகள் மற்றும் அமைப்புகளைத் தோற்றுவித்தார்.

அம்பேத்கரின் கல்வியும் அவர் பெற்ற பட்டங்களும்

  • 1912ல் அம்பேத்கர் கல்வி உதவித் தொகை பெற்று எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்து பட்டதாரி ஆனார்.
  • அம்பேத்கர் பரோடா அரசரின் கல்வி உதவித் தொகை பெற்று அமெரிக்காவில் பட்ட மேற்படிப்புப் பட்டத்தை பெற்றார்,
  • முனைவர் பட்டத்தை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
  • சட்டம் மற்றும் பொருளாதார படிப்புக்களுக்காக அவர் லண்டன் சென்றார்.

அம்பேத்கரின் கட்டுரை

  • 1916ல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியாவின் சாதிகள்‘ (Castes in India) என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
  • இந்தியாவின் சாதிகள்‘ கட்டுரை பின்னர் அரிய இந்தியப் புத்தகம் (Indian Antiquary) என்ற தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டது.

அம்பேத்கரின் பத்திரிக்கைகள்

  • மூக் நாயக் (வாய் பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கை தனது கருத்துகளை வெளிப்படுத்துவதற்காக அம்பேத்கர் தொடங்கினார்.

 அம்பேத்கரின் அமைப்பு

  • பஹிஷ் கிரித் ஹிடாகரினி சபை (தனித்து விடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு) என்ற அமைப்பைத் தனது செயல்பாடுகளுக்காகவும் அம்பேத்கர் தொடங்கினார்.
  • பம்பாய் சட்டப்பேரவையின் உறுப்பினராக அம்பேத்கர் மக்களின் திறன் குறைபாடுகளைக் களைவதற்காக பாடுபட்டார்.
  • ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் அம்பேத்கர் தொடங்கினார்.
  • அம்பேத்கரின் நேரடித் தாக்குதல்கள் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் காலனி ஆதிக்க ஆட்சியின் அதிகாரிகளைக் குறிவைத்து இருந்தன.
  • இதனிடையே பூரண சுதந்திரம் அல்லது முழுமையான விடுதலை என்பதற்காகப் போராடுவதைக் குறிக்கோளாக அறிவிக்கும் இறுதி நிலையைச் சுதந்திரப் போர் அடைந்தது.

அம்பேத்கர் – சவுத்பொரோ குழு – தனித் தொகுதி பேச்சு

  • இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரிக்க சவுத்பொரோ குழுவை பிரிட்டிஷ் அரசு அமைத்தது.
  • சவுத்பொரோ குழுவுடன் கலந்துரையாட வருமாறு அம்பேத்கருக்கு பிரிட்டிஷ் அரசு அழைப்பு விடுத்தது.
  • அம்பேத்கர் சவுத்பொரோ குழுவுடன் கலந்துரையாடல்களின் போது தான் முதன் முறையாக தனித் தொகுதிகள் பற்றி பேசினார்.
  • இந்தத் திட்டத்தின்படி தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மட்டுமே அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வாக்களிக்க முடியும்.
  • தேர்தலில் போட்டியிடும் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வேட்பாளர் தீண்டத்தக்க வாக்காளர்களைச் சார்ந்திருக்க நேரிட்டால், வாக்களிக்கும் பின்னவருக்குக் கடமைப்பட்டவராகவும் அவர் மாறவேண்டிய நிலைமை ஏற்படும் என்று அம்பேத்கர் கருதினார்.
  • இட ஒதுக்கீடு பெறப்பட்ட இடங்களில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தால் அவர்கள் தங்களின் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் பெறுவதில் அம்பேத்கர்

  • அம்பேத்கர் தனித் தொகுதிகள் கோரிக்கையை அனைத்துக் கட்சி மாநாடுகள், சைமன் குழு, வட்ட மேசை மாநாடு என அனைத்து இடங்களிலும் மீண்டும் வலியுறுத்தினார்.
  • தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் தருவது தேசிய இயக்கத்தை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்று காங்கிரசும் காந்தியடிகளும் கவலைப்பட்டனர்.
  • முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குத் தனித்தொகுதிகள் மற்றும் இதர சிறப்பு நலன்கள் ஆகியன பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வழியமைக்கும் என்று காங்கிரசும் காந்தியடிகளும் வருத்தப்பட்டனர்.
  • தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை இந்துகளில் இருந்து அரசியல் ரீதியாகப் பிரிப்பது சமூகப் பாதிப்புகளை உருவாக்கும் என்று காந்தியடிகள் அச்சப்பட்டார்.

அம்பேத்கரும் கட்சி அரசியலும்

  • அம்பேத்கர் இரண்டு கட்சிகளை ஆரம்பித்தார்.
  • 1937ல் சுதந்திர தொழிலாளர் கட்சியை அம்பேத்கர் தொடங்கினார்.
  • 1942ல் பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பை அம்பேத்கர் தொடங்கினார்.
  • 1942ல் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்.
  • சில மாதங்களுக்குப் பிறகு அரசப்பிரதிநிதியின்(வைசிராய்) அமைச்சரவையில் அமைச்சராக இடம்பிடித்தார்.
  • சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அம்பேத்கர், சுதந்திரம் பெற்ற பிறகு நேரு அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற அழைக்கப்பட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!