இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு – 1931

  • 1930 களில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு பெரும் மக்கள் கட்சியாக உருவெடுத்தது.
  • சமூக, பொருளாதார மற்றும் நீதி அடிப்படையில் ஒரு சமத்துவ சமூகத்தைப் பற்றிப் நேருவின் தலைமையின் கீழ் வந்த காங்கிரஸ் பேச ஆரம்பித்தது.
  • பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக-பொருளாதாரத் தேவைகள் கராச்சியின் காங்கிரஸ் அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது.
  • காந்தியடிகளின் தலைமையின் கீழ் காங்கிரஸ் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தது.
  • தனது சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் குத்தகை செலுத்தா மற்றும் வரி செலுத்தாப் போராட்டத்தைக் கடைபிடித்தது.
  • 1931 மார்சில் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதோடல்லாமல் சுதந்திர இந்தியாவின் பொருளாதார கொள்கை பற்றிய ஒரு பார்வையை வழங்கியது.
  • கராச்சி அமர்வு தீர்மானங்கள் பின் சுதந்திர இந்தியாவிற்கான இந்திய தேசிய காங்கிரசின் கொள்கை அறிவிப்பு விளக்கமானது.
  • அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளும் சமூக மற்றும் பொருளாதாரத் திட்டங்களும் உறுதிசெய்வது யாதெனில் அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஆகும்.
  • அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் என்பது பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
  • சுதந்திர இந்தியாவில் அடிப்படை உரிமைகள் பட்டியலில் காந்தியடிகளின் கொள்கைகளும் நேருவின் சோசலிச பார்வைகளும் இடம் பெற்றன.
  • அடிப்படை உரிமைகள், உண்மையில் இந்திய அரசமைப்பின் பகுதி 3ல் இடம் பெற்றுள்ளன.
  • சில அடிப்படை உரிமைகள் பகுதி 4லில் நாட்டின் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!