பகத் சிங் & மீரட் சதி வழக்கு – 1929

Contents show

வேலை நிறுத்தங்களும் கொடுஞ் சட்டங்களும் 

வேலை நிறுத்தங்கள்

  • 1927ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் செப்டம்பரிலும் நடைபெற்ற காரக்பூர் ரயில்வே பணிமனை வேலை நிறுத்தங்கள்.
  • 1928ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை மாதங்களுக்கிடையில் நடைபெற்ற லில்லுவா ரயில் பணிமனை வேலை நிறுத்தம்.
  • 1928 ஏப்ரலில் பம்பாயில் நடந்தேறிய ஜவுளித் தொழிலாளர் வேலை நிறுத்தம்.
  • 1928ஆம் ஆண்டின் கல்கத்தா துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்.
  • 1928ஆம் ஆண்டு ஜூலையில் திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பணிமனையில் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தம்.
  • 1929ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வங்காளத்தின் சணல் ஆலைகளில் நடைபெற்ற பல்வேறு வேலை நிறுத்தங்கள்.

 பகத் சிங் –1907

  • பகத் சிங் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலுள்ள லயல்பூர் மாவட்டம், ஜார்ன் வாலா என்ற கிராமத்தில் 1907 செப்டம்பர் 28ல் பிறந்தார்.
  • பகத் சிங்கின் தகப்பனார் கிஷன் சிங், தாயார் வித்யாவதி கவுர் ஆவர்.
  • பகத் சிங்கின் தகப்பனார் ஒரு தாராளவாதியாக இருந்தார்.
  • பகத் சிங்கின் குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டக்காரர்களாக விளங்கினர்.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலை பகத் சிங்கின் 14ஆம் வயதில் நிகழ்ந்தது.
  • நவ் ஜவான் பாரத் சபா, ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் பகத் சிங் தன்னை இணைத்துக் கொண்டார்.
  • தேசியவாதத்தின் ஓர் ஒப்பற்ற நிலையைப் பகத் சிங் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
  • ஒரு தனித்த வழி என்ற அளவில் ஒட்டு மொத்த விடுதலை இயக்கத்தின் லட்சியங்களுக்காகப் பகத் சிங்கின் புரட்சிகர தேசியவாத நிலைப்பாடு பெரிதும் பாராட்டப்படுகிறது.

ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் – 1917

  • 1917ல் ரஷ்யாவில் நடந்தேறிய அக்டோபர் புரட்சியும் சோசலிசச் சித்தாந்தங்களும் புரட்சியாளர்களிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது.
  • சச்சின் சன்யால், ஜோகேஷ் சட்டர்ஜி ஆகியோரால் ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

இர்வின் பிரபு

  • 192631 ஆம் ஆண்டுகளில் கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவும் இருந்தவர் இர்வின் பிரபு.

ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் பெயர் மாற்றம்

  • ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் 1928 செப்டம்பரில் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்று பகத் சிங் பெயர் மாற்றம் செய்யதார்.
  • சந்திரசேகர ஆசாத், சிவராம் ராஜகுரு, சுகதேவ் தாபர் ஆகியோருடன் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷனின் தலைவர்களில் ஒருவராக பகத்சிங் விளங்கினார்.
  • முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசைத் தூக்கி எறிந்து புரட்சி ஒன்றின் மூலமாக ஒரு சோசலிசச் சமூகத்தை நிலை நாட்டுவதே ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷனின் குறிக்கோளாகும்.

ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷனின் நடவடிக்கைகள்

  • 1928 டிசம்பர் மாதத்தில் லாலா லஜபதி ராய் மீது கொடுந் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • லாகூரில் சாண்டர்ஸினைக் கொன்றது போன்ற பல நடவடிக்கைகளில் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஈடுபட்டது.
  • லாலா லஜபதி ராய் மீது கொடுந் தாக்குதல் நடத்திய லாகூர் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ. ஸ்காட்.
  • லாலா லஜபதி ராயின் மரணத்திற்கும் பொறுப்பான லாகூர் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ. ஸ்காட்டுக்குப் பதில் தவறுதலாக சாண்டர்ஸ் பலியானார்.

 கொடுஞ் சட்டங்கள்

  • தொழிற் சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்கு இரு சட்டங்களை அரசு இயற்றப்பட்டது.
  • 1928ஆம் ஆண்டின் தொழிற் தகராறுகள் சட்டம் இயற்றப்பட்டது.
  • 1928ஆம் ஆண்டின் பொது மக்கள் பாதுகாப்பு மசோதா சட்டம் இயற்றப்பட்டது.

இரண்டாவது லாகூர் சதி வழக்கு (1928 – 1931)

  • ராஜகுரு, சுகதேவ், ஜதீந்திர நாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
  • சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர்,
  • இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு (1928 – 1931) என்று அறியப்படுகிறது.
  • சிறையின் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஜதீந்திரநாத் தாஸ் 64 நாட்களுக்குப் பின்னர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.
  • லாகூர் சதி வழக்கின் விசாரணைகள் முடியும் வரை குண்டு வீச்சு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

மீரட் சதி வழக்கு – 1929

  • 1929ஆம் ஆண்டின் மீரட் சதி வழக்கு தான் அனேகமாக, ஆங்கிலேய அரசினரால் தொடுக்கப்பட்ட அனைத்துக் கம்யூனிஸ்ட் சதி வழக்குகளிலும் பெரிதும் புகழ் பெற்றதாகும்.
  • பம்பாய், கல்கத்தா, பஞ்சாப், பூனா, ஒருங்கிணைந்த பிரதேசங்கள் போன்ற பகுதிகளிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் 32 முன்னோடிச் செயல்பாட்டாளர்களைக் கைது செய்தது.
  • அவர்கள் அனைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல.
  • எனினும் அவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்கள் ஆவார்கள்.
  • அவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்கள்.
  • இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க உதவுவதற்கென பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால் மூவர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
  • பிலிப் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகியோர் பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் ஆவர்.
  • மீரட் சதி வழக்கில் பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
  • கைது செய்யப்பட்ட 32 தலைவர்களும் மீரட்டுக்கும் கொண்டு வரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • மீரட் சதி வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 121 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
  • நிலை குலைவிக்கும் விஷயங்கள்’ (subversive materials) என்று விவரிக்கப்பட்ட புத்தகங்கள், கடிதங்கள், போன்ற கணிசமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களாக ஒப்படைக்கப்பட்டன.
  • விசாரணையை மீரட் நகரில் நடத்துவதென்று பிரிட்டானிய அரசு தீர்மானித்தது.
  • மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பிடிபட்ட பம்பாய் போன்ற இடங்களில் அல்லாமல், எனவே அவர்கள் நடுவர் விசாரணை என்ற சலுகையைப் பெற முடிந்தது.
  • நடுவர் விசாரணை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை உருவாக்கக் கூடும் என்று பிரிட்டானிய அரசு அஞ்சியது.

பகத்சிங்கின் குண்டுவீச்சு

  • பகத் சிங் 1929 ஏப்ரல் 8ல் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசினார்.
  • அந்தக் குண்டுகள் எவரையும் கொல்லவில்லை.
  • ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்ட செயலாகச் செயல்பூர்வமான ஒரு நடவடிக்கையாகப் புரட்சியாளர்களால் அது கருதப்பட்டது.
  • சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக தொழிற் தகராறுகள் மசோதாவை அறிமுகப்படுத்தும் நாளை அவர்கள் இதற்கெனத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?” என்னும் நூலிலிருந்து பகத்சிங்.

  • நான் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய முந்தைய நம்பிக்கைகளும் தீர்மானங்களும் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மாற்றத்திற்கு உள்ளானதுபகத் சிங்
  • மிகவும் முக்கியமாக நமது முன்னோடிகளிடையே நிலவிய வன்முறைச் செயல்பாடுகள் மீதான மோகம் தீவிரமான சித்தாந்தங்களின் மூலம் மாற்றீடு செய்யப்பட்டதுபகத் சிங்
  • இதில் மாயத்திற்கு இடமில்லை. கண்மூடித்தனமான நம்பிக்கைக்கும் இடமில்லை. யதார்த்தமான அணுகுமுறையே நமது ஒழுங்கு முறை ஆனது – பகத் சிங்
  • தீவிரமான தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே வன்முறையைக் கையாள்வது நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும் – பகத் சிங்
  • அனைத்து வெகுஜன இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கையாக அஹிம்சை இருக்கும்பகத் சிங்
  • வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. நாம் எந்த லட்சியத்திற்காகப் போரிட்டோமோ அதன் தூய கருதுகோளே மிக முக்கியமானது” – பகத் சிங்

பஞ்சாப் மாநில ஆளுநருக்கு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் கடிதம்

  • தேசத்தின் விடுதலைக்காக மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்திலும் இந்தியாவின் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையையும் துணிவையும் காட்டிப் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பினர்.
  • அந்தக் கடிதத்தில் “முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
  • இந்தப் போர் எங்களுடன் தொடங்கியதுமல்ல, எங்கள் வாழ்க்கையுடன் முடிவு பெறப்போவதுமல்ல.
  • நாங்கள் போர் தொடுத்ததால் போர்க் கைதிகள் ஆனோம் என்று உங்கள் நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
  • அப்படியானால் எங்களைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாகச் சுட்டுக் கொல்லுங்கள்” என்று கோரப்பட்டிருந்தது.

புரட்சி ஓங்குக’ (Inquilab Zindabad)

  • புரட்சி ஓங்குக’ (Inquilab Zindabad) என்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் முழக்கமிட்டனர்.

புரட்சி – பகத்சிங் விளக்கம்

  • பகத்சிங்கையும் அவருடன் இருந்த தேச பக்தர்களையும் புரட்சிகர தேசியவாதிகள் எனச் சில குறிப்புகள் விவரிக்கின்றன. அது ஒரு தவறான கருதுகோள் ஆகும்.
  • வரலாற்றுப் புகழ்பெற்ற பகத்சிங், பிற புரட்சிகர தேசியவாதிகளிடமிருந்து அவருடைய குழுவினர் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.
  • புரட்சி என்பது வெறும் குண்டு எறிதலோ கைத் துப்பாக்கியால் சுடுவதோ அல்ல.
  • புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை ஆகும்.
  • சுதந்திரம் என்பது அனைவரின் அழியாத பிறப்புரிமை ஆகும்.
  • சமூகத்தின் உண்மையான ஆதரவாளர்கள் உழைப்பாளிகள் ஆவர்.
  • இந்தப் புரட்சியின் பலி பீடத்தில் நாம் மாபெரும் லட்சியத்துக்காக அளிக்கும் எந்தத் தியாகமும் அதற்கு முன் பெரிதல்ல

இர்வின் பிரபு பயணம் செய்த ரயிலைக் கொளுத்தும் முயற்சி

  • 192631 ஆம் ஆண்டுகளில் கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவும் இருந்தவர் இர்வின் பிரபு.
  • 1929, டிசம்பரில் இர்வின் பிரபு பயணம் செய்து கொண்டிருந்த ரயிலைக் கொளுத்தும் முயற்சியிலும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஈடுபட்டது.
  • 1930ஆம் ஆண்டில் பஞ்சாபிலும் உத்தரப்பிரதேசத்திலும் ரயிலைக் கொளுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

லாகூர் சதி வழக்கில் மரண தண்டனை1930

  • லாகூர் சதி வழக்கில் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு 1930 அக்டோபர் 7 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 லாகூர் சதி வழக்கில் பகத்சிங் தூக்கு

  • லாகூர் சதி வழக்கில் 1931 மார்ச் 23 அன்று அதிகாலையில் லாகூர் சிறைச் சாலையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!