வரதட்சணை:
- வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும்.
- இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.
- வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
- இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
- 2012 க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன.
- சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள்.
காரணங்கள்
- கல்வியறிவின்மையே முதன்மைக் காரணமாகும்
- வரதட்சணை பெறுவதை கௌரமாக கருதினர்
- சட்டங்களை பின்பற்ற விருப்பம் இல்லாமை.
- இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு
- பரம்பரையாக பின்பற்றி வருதல்.
- மணப்பெண்ணின் பொருளாதார நிலை.
- பேராசை
விளைவுகள்
- வரதட்சணையால் ஏற்பட்ட இறப்புகள்
- பெண்களுக்கு எதிரான உளவியல் உடலியல் ரீதியான மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட குடும்ப வன்முறைச் செயல்கள்.
- பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறல் (விதிகள் -14,15,21).
- பாலின விகித குறைவு
- மனநல கோளாறுகள்
- பெண் சிசுக்கொலை
- ஏழை மக்களை கடனில் சிக்க வைக்கிறது