குழந்தைத் திருமணங்கள் என்றால் என்ன? அதன் கரணங்கள் மற்றும் விளைவுகளை பற்றி விவாதிக்க.

குழந்தைத் திருமணங்கள்:

  • குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே திருமண உறவில் இணைதல் குழந்தைத் திருமணமாகும்.
  • இந்தியாவில், பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18, ஆண்களுக்கு 21.
  • இச்செயல் முறை கிராமப்புற பகுதிகளில் (48%) நகர்ப்புறங்களை (29%) விட அதிகமாக உள்ளது.

காரணங்கள்:

  • வறுமையும், வரதட்சணை போன்ற செலவுகளும்
  • ஆணாதிக்க சமூகப் போக்கு, பெண்ணை சுமையாக பார்த்தல்.
  • குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் குறைவாக இருப்பது.
  • பண்பாட்டுக் கூறுகள்
  • சட்டங்களை முழுமையாக அமல்படுத்தாமை

பாதிப்புகள்:

  • HIV போன்ற பாலின நோய்கள் பரவல்
  • மக்கட்தொகை பெருகுதல்
  • குடும்பத்தினுள் புரிதல் இன்மை
  • பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுப்பு
  • வீட்டு வேலை பலுவின் காரணமாக படிப்பைக் கைவிடல்.
  • மற்றவர்களைச் சார்ந்திருத்தல் மற்றும் அதிகாரமின்மை
  • 15 வயதில் உள்ள தாய்மார்கள் பிரசவத்தின் போது இறப்பதற்கான வாய்ப்பு விகிதம் அதிகம்.

இந்தியச் சட்டங்கள்:

  • குழந்தைத் திருமணம் தடைச் (சட்டத்திருத்தம்) சட்டம், 1978
  • பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆணிற்கு 21 ஆகவும் அதிகரித்தது.
  • குறைந்த வயதில் திருமணம் நடப்பினும் செல்லும்.

குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006:

  • 21 வயதுக்குட்பட்ட ஆணின் திருமணத்தை குழந்தைத் திருமணமாக வரையறுத்தது.
  • மேஜர் வயதை எட்டாத அனைவரும் “மைனர்” என கருதப்பட்டது.
  • ஆணும் பெண்ணும் முதிர்ச்சியடைந்தபின் இரண்டு வருடங்களில் திருமணத்தை முறித்துக் கொள்ள வாய்ப்பு
  • பெண்களுக்கு நிதி உதவி
  • குழந்தைத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்குதல்.
  • குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு, குழந்தையை பெற்றோரில் யாரிடம் காவலில் வைப்பது என்பதை நிர்ணயிப்பதில் மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.
  • குழந்தைத் திருமணம் பாதுகாப்பு ஊழியரை நியமித்தல்.

பணிகள்:

  • குழந்தைத் திருமணத்தை தடுத்தல்
  • ஆதாரம் திரட்டுதல்
  • உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தல்
  • தீய விளைவுகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தல்.
  • சமூகத்தை விழிப்படைய செய்தல்
  • அரசிற்கு தேவையான தரவுகளை வழங்கல்

தண்டனை:

  • பிடியாணையற்ற, பெயிலில் வெளியேற முடியாத, “2” வருட
  • கடுத்தண்டனை (அ) 1 லட்சம் அபராதம்.
  • குழந்தைத் திருமணத்தை ஊக்குவித்த பெற்றோருக்காக பாதுகாவலருக்கோ சிறைத்தண்டனை
  • குழந்தைத் திருமணத்தால் விளையும் சமூகப் பொருளாதார பாதிப்புகளை பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டும்.
  • சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தினால் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!