இரண்டாம் சந்திரகுப்தர் – வரலாறு

இரண்டாம் சந்திரகுப்தர்:

  • பொ.ஆ.375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
  • தனது சகோதரரான ராமகுப்தருடன் (பொ..370-375) வாரிசுரிமைக்குப் போராடி ஆட்சிக்கு வந்தார்.
  • விக்ரமாதித்யன் என்றும் அழைக்கப்பட்டார்.
  • சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார்.
  • தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார்.
  • குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது.
  • வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார்.
  • உஜ்ஜயினி ஒரு முக்கிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகராக வளர்ச்சி பெற்றது.
  • விக்ரமன், நரேந்திரசந்திரர், சிம்மசந்திரர், நரேந்திரசிம்மர், விக்ரமதேவராஜர், தேவஸ்ரீ, தேவகுப்தன், தேவராஜன், சிம்ஹவிக்ரமன், விக்ரமாதித்யன், சகாரி ஆகியன இவரது வேறு பெயர்களாகும். (இவை நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.)
  • வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தரே.
  • இவரது ஆட்சிக்காலத்தில்தான் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது.

விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்கள்:

காளிதாசர்சமஸ்கிருதப் புலவர்
ஹரிசேனர்சமஸ்கிருதப் புலவர்
அமர சிம்ஹர்அகராதியியல் ஆசிரியர்
தன்வந்திரிமருத்துவர்
காகபானகர்சோதிடர்
சன்குகட்டடக் கலை நிபுணர்
வராகமிகிரர்வானியல் அறிஞர்
வராச்சிஇலக்கண ஆசிரியர் (ம) சமஸ்கிருதப் புலவர்
விட்டல்பட்டர்மாயவித்தைக்காரர்

 

  • இவரது ஆட்சிக்காலத்தில்தான் பாஹியான் என்ற பௌத்த அறிஞர் சீனாவிலிருந்து இந்தியா வந்தார்.
  • பாஹியான் கங்கைச் சமவெளியை பிராமணர்களின் பூமி என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகியான்

  • இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில், சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார்.
  • பாகியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
  • கடுமையான தண்டனையின்றி நீதி வழங்கப்பட்டது.
  • மரணதண்டனை வழங்கப்படவில்லை.
  • இரண்டாம் சந்திரகுப்தன் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!