சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் – அரங்கேற்று காதை – 2

நாட்டிய அரங்கின் அமைப்பு

பாடல்**

எண்ணிய நூதலார் இயல்பினில் வழாஅது மண்னகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு **

புண்ணிய கெடுவரைப் போகிய கெடும் கழைக் கண்ணிடை ஒரு சாண் வளர்ந்த்து கொண்டு **

நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக, **

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒரு கோல்

உயரத்து உறுப்பினது ஆகி **

உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடை நிலம் நால் கோல் ஆக **

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப் **

பூதரை எழுதி மேல் நிலை வைத்துத் தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து

ஆங்கு ஒரு முகை எழினியும் பெருமுகை எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து*

ஆங்கு ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளையுடன் நாற்றி விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்துப் **

பாடலின் பொருள்

  • திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.
  • பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே (ஒரு)1 சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர்.
  • நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைத்தனர்.
  • தம் கைப்பெருவிரலில் (இருபத்து நான்கு) 24 அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர்.
  • அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் (ஏழு) 7 கோல் அகலமும் (எட்டு) 8 கோல் நீளமும் (ஒரு) 1 கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.
  • அரங்கில் தூணிற்கு மேல் வைத்த உத்திரப் பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடையே, இடைவெளி (நான்கு) 4 கோல் அளவாக இருந்தது.
  • அரங்கின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஏற்ற (இரு) அமைக்கப்பட்டிருந்தன. 2 வாயில்கள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன
  • மேற்கூறியபடி அமைக்கப்பட்ட அவ்வரங்கில் மேல்நிலை மாடத்தில் (ஐந்து) 5 பூதங்களை யாவரும் புகழும்படி சித்தரித்து வைத்தனர்.
  • தூண்களின் நிழலானது, அவையிலும் அரங்கிலும் விழாதபடி நல்ல அழகான நாடக நிலை விளக்குகளை நிறுத்தினர்.
  • மேலும், மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை,
  • மேடையின் (இரு) 2 புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை,
  • மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படும் கரந்துவரல் திரை,
  • இவை (ஒரு முகத்திரை, பொருமுகத்திரை, கரந்துவரல் திரை மூன்றையும்) 3 சிறப்புடன் அமைத்தனர்.
  • ஓவிய வேலைப்பாடு மிக்க மேல் விதானத்தையும் அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துகளால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர்.
  • இவ்வாறு ஒவ்வொன்றையும் புதுமையாக, மேடையில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைத்தனர்.

சொல்லும் பொருளும்

  • விரல் – ஆடவர் கைப் பெருவிரல்
  • நித்திலம் – முத்து
  • கழை – மூங்கில்
  • உத்தரப் பலகை – மேல் இடும் பலகை
  • ஓவியவி தானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
  • கண் – கணு
  • பூதர் – ஐம்பூதங்கள்
  • விருந்து – புதுமை.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!