SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள்
திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம்
அறநூல்கள்
- மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள்.
- அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள்.
திருக்குறளை பாராட்டிய ஒளவை
- “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளின் பெருமையை ஒளவையார் போற்றுகிறார்.
வள்ளுவனை புகழ்ந்த பாரதியும் பாரதிதாசனும்
- “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு எனப் பாரதி திருக்குறளை பாராட்டியுள்ளார்
- வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே – எனப் பாரதி திருக்குறளை பாராட்டியுள்ளார்
திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்
- ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்ட தஞ்சை ஞானப்பிரகாசர்.
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதிய – மணக்குடவர்.
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிகிறது.
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்.
- திருக்குறளில் கோடி என்ற சொல் (ஏழு) 7 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் (எட்டு) 8 குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது
- திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர்- ஜி.யு. போப்.
- திருக்குறள் இதுவரை இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம், முதலிய (நூறு) 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நாலடியாரும் திருக்குறளும்
- ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
- பழகு தமிழ்ச் சொல் அருமை நாலிரண்டில் என்னும் பழ மொழிகள் திருக்குறளின் பெருமையை விளக்குகின்றன
- இவற்றுள் ‘நால்’ என்பது நாலடியாரையும் ‘இரண்டு’ என்பது திருக்குறளையும் குறிக்கும்.
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————