கலையும் கட்டடக்கலையும்
- குப்தர் காலத்தில் நகரம், திராவிட பாணியிலான கலைகள் வளர்ந்தன.
- கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
- ஜான்சிக்கு அருகிலுள்ள தியோகார் கோயில், அலகாபாத்துக்கு அருகிலுள்ள கார்வாஸ் ஆலய சிற்பங்கள் குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
- மதுராவிலுள்ள நிற்கும் வடிவிலுள்ள அழகிய புத்தர் சிலையில் சிறிது கிரேக்க சாலையைக் காணலாம்.
- ஸ்கந்தகுப்தரின் பிடாரி ஒற்றைக் கல்தூண் மகத்தானது.
குடைவரை, கட்டுமானக் கோயில்கள்
- குடைவரைக் கோயில்கள் அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
- உதயகிரி குகைகளும் (ஒடிசா) இவ்வகையைச் சேர்ந்தவைதான்.
ஸ்தூபிகள்
- மிகச் சிறந்த ஸ்தூபிகள் சமத் (உத்தரப்பிரதேசம்), ரத்தினகிரி (ஒடிசா), மிர்பூர்தான் (சிந்து) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
சிற்பங்கள் – கல் சிற்பங்கள்
- சாரநாத்தில் காணப்படும் நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை. புராணச் சிற்பங்களில் மிக அழகானது உதயகிரி குகையின் நுழைவுவாயிலில் இருக்கும் வராஹ அவதாரச் சிலை,
உலோகச் சிற்பங்கள்
- பீகாரின் நாளந்தாவில் உள்ள புத்தரின் பதினெட்டடி செம்புச் சிலை, சுல்தான்கஞ்சில் உள்ள ஏழரையடி புத்தர் சிலை ஆகிய இரண்டும் குப்தர் காலத்து உலோகச் சிற்பங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
ஓவியங்கள்
- குப்தரின் சுவரோவியங்கள் அஜந்தா, பாக், பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
- அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவையல்ல. ஏனெனில் ஃபிரெஸ்கோ ஓவியங்கள் சுவரின் பூச்சு ஈரமாக இருக்கும்போதே வரையப்படுபவை.
- ஆனால், அஜந்தாவின் சுவரோவியங்கள் பூச்சு காய்ந்தபின் வரையப்பட்டவை.
சுடுமண் சிற்பங்களும் மட்பாண்டக் கலையும்
- அச்சிசத்திரா, ராய்கார், ஹஸ்தினாபர், பஷார் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள குப்தர் காலத்து மட்பாண்டங்கள் மட்பாண்டக் கலையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
- இக்காலகட்டத்து மட்பாண்டங்களின் தனிப்பட்ட சிறப்பம்சம் ‘சிவப்பு மட்பாண்டங்கள் ஆகும்.