இரும்பின் பிரிப்பு முறைகளை வரிசைப்படுத்துக.

ஆக்சைடுகள் இரும்பின் முக்கிய தாது ஹேமடைட் (Fe2O3) ஆகும்

புவியீர்ப்பு முறையில் அடர்ப்பித்தல்:

  • தூளாக்கப்பட்ட தாதுவை, சீராக ஓடும் நீரில் கழுவும்போது லேசான மாசுக்கள் அகற்றப்பட்டு, கனமான தாதுக்கள் கீழே படிகின்றன.

காற்றுள்ள மற்றும் காற்றில்லா சூழலில் வறுத்தல்;

  • அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது, அளவான காற்றில் உலையில் சூடேற்றப்படும் போது, ஈரப்பதம் வெளியேறி சல்பர், ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் மாசுக்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைகின்றன.

ஊது உலையில் உருக்கிப்பிரித்தல்

  • வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை 8:4:1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு, உலையின் மேலுள்ள கிண்ணக்கூம்பு அமைப்பு வழியாக, செலுத்தப்படுகிறது. உலையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.

கீழ்ப்பகுதி (எரிநிலை மண்டலம்)

  • இந்தப் பகுதியின் வெப்பநிலை 1500°C ஆகும் வெப்பக்காற்றுடன் தாதுக்கலவை சேரும் போது, ஆக்ஸிஜனுடன் எரிந்து CO வாக மாறுகிறது.

Also Read

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!