குடும்ப வன்முறை:
- குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும்.
குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளாக பெண்கள் மனித உரிமை ஆணையம் கூறியவை
- மாமியார் கொடுமைகள்
- கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள்
- கணவனால் மறுக்கப்படும் உரிமைகள்
- அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை
- சுதந்திர உரிமை
- பெண் சிசுக்கொலை கொலைகள்
- வரதட்சணைக் கொடுமை
- பெண் கருக்கொலைகள்
- மனைவியை அடித்துத் துன்புறுத்தல்
- விதவைகள் கொடுமைகள்
- குழந்தை மனித உரிமை மீறல்
- கொலைகள் புரிதல்
- எரித்தல் போன்றவை
குடும்ப வன்முறையைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைள்:
- பெண்களின் மீதான வன்முறையைத் தடுக்க மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- பெண்களுக்கெதிரான குற்றங்களை செயல்படுத்துவோருக்கு கடினமான தண்டனைகளை வழங்குதல்
- பெண்களுக்கான மனித உரிமை பிரிவுகளை ஏற்படுத்தல்
- வரதட்சணையை ஒழிக்க வரதட்சனை தடுப்புச்சட்டம் எற்படுத்தல்
- பெண்களுக்கெதிரான வன்முறை புகுந்தவீட்டில் நடந்தால் சட்டப்பிரிவு 498ஏ பிரிவின் கீழ் 3 ஆண்டிற்கு கடுங்காவல் தண்டனை / அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படும். 6) பெண்கள் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டமை
- குடும்ப வன்முறையினால் ஏற்படுத்தப்படும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375, 372, 379, 498ஏ, 376ஏ, 302பி, 306, 398ஏ, 307 மற்றும் 309 பரிவுகளின் கீழ் குற்றங்களையும் தண்டனையையும் விதிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.
- முறையற்ற மனித உரிமை அத்துமீறல் சட்டம்
- தொழிலாளர் நலம் காணுவதற்கான சட்டம் – ஆகியன.