தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு நிகழ்கிறது என்பதை விவரித்து எழுதுக.

மகரந்தச்சேர்க்கை

  • பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூள், சூலக முடியைச் சென்று அடைவது மகரந்தச்சேர்க்கை எனப்படும்.

மகரந்தச்சேர்க்கையின் பயன்கள்

  • மகரந்தச்சேர்க்கையைத் தொடர்ந்து கருவுறுதல் நடைபெற்று கனியும் விதையும் உருவாகின்றன.
  • அயல் மகரந்தச்சேர்க்கையின் காரணமாக இருவேறுபட்ட ஜீன்கள் இணைவதால் புதிய வகைத் தாவரம் உருவாகிறது.

மகரந்தச்சேர்க்கையின் வகைகள்

  • தன் மகரந்தச்சேர்க்கை
  • அயல் மகரந்தச்சேர்க்கை

தன் மகரந்தச்சேர்க்கை (ஆட்டோகேமி)

  • ஒரு மலரிலுள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும். எ.கா. ஹைபிஸ்கஸ்

தன் மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள்

  • இருபால் மலர்களில் தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.
  • மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.
  • மகரந்தத்தூள்கள் வீணடிக்கப்படுவதில்லை

தன் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்

  • விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன.
  • கருவூண் மிகச் சிறியது. எனவே விதைகள் மிக நலிவடைந்த தாவரங்களை உருவாக்கும்.
  • புதிய வகைத் தாவரம் உருவாகாது.

அயல் மகரந்தச்சேர்க்கை

  • ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் மலரில் உள்ள சூலக முடியைச் சென்று அடைவது அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
  • எ.கா. ஆப்பிள், திராட்சை, பிளம் முதலியன.

அயல் மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள்

  • அயல் மகரந்தச்சேர்க்கையின் மூலம் உருவாகும். விதைகள், வலிமையான தாவரங்களை உருவாக்கும். 
  • இதன் மூலம் புதிய வகைத் தாவரங்கள் உருவாகின்றன.
  • நன்கு முளைக்கும் திறன் கொண்ட விதைகள் உருவாகின்றன.

அயல் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்

  • அயல் மகரந்தச்சேர்க்கை, புறக்காரணிகளை நம்பி இருப்பதால் மகரந்தச்சேர்க்கை தடைபடுகிறது.
  • அதிக அளவில் மகரந்தத்தூள் வீணாகிறது.
  • சில தேவையில்லாத பண்புகள் தோன்றுகின்றன.
  • மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!