நுண்ணோக்கிகள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

நுண்ணோக்கிகள்

  • நுண்ணோக்கிகள் என்பவை மிகநுண்ணிய பொருள்களைக் காண உதவும் ஒளியியல் கருவியாகும்.
  • இவை
    1. எளிய நுண்ணோக்கிகள்
    2. கூட்டு நுண்ணோக்கிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

எளிய நுண்ணோக்கி

  • குறைந்த குவியத் தொலைவு கொண்ட குவி செயல்படுகிறது. குவிலென்சைக் கண்களுக்கு லென்சானது எளிய நுண்ணோக்கியாகச் அருகில் வைத்து, பொருள்களைப் பார்க்கும் போது, பொருள்களின் பெரிதாக்கப்பட்ட மாயப்பிம்பம் தோற்றுவிக்கப் படுகிறது.

எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள்

  • இது கடிகாரம் பழுது பார்ப்பவர்கள் மற்றும் ஆபரணங்கள் செய்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
  • சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவுகிறது.
  • பூக்கள் மற்றும் பூச்சிகளின் பாகங்களை உற்று நோக்கப் பயன்படுகிறது.
  • தடய அறிவியல் துறையில், கைரேகைகளைப் பகுத்தறியப் பயன்படுகிறது.

கூட்டு நுண்ணோக்கி

  • இந்நுண்ணோக்கியும் மிக நுண்ணிய பொருள்களைக் காண உதவுகிறது. இதன் உருப்பெருக்குத்திறன் எளிய நுண்ணோக்கியின் உருப்பெருக்குத்திறனை விட அதிகம்.
  • பொருளருகு லென்சு, கண்ணருகு லென்சு குறைப்பதன் மூலம் நுண்ணோக்கியின் உருப்பெருக்குத்திறனை அதிகரிக்கலாம். ஆனால், குவிலென்சின் குவியத் தொலைவினைக் லென்சுகளை வடிவமைப்பதில் உள்ள இடர்பாடுகளால், குவிய தூரத்தினை ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் குறைக்க இயலாது.
  • எனவே கூட்டு நுண்ணோக்கியில், உருப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இரண்டு குவிலென்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அமைப்பு

  • கூட்டு நுண்ணோக்கியானது இரண்டு குவி லென்சுகளைக் கொண்டது. இவற்றில் பொருளுக்கு அருகில் உள்ள குறைந்த குவிய தூரம் கொண்ட குவிலென்சானது, ‘பொருளருகு லென்சு’ அல்லது பொருளருகு வில்லை என்றும் உற்று நோக்குபவருடைய கண்ணிற்கு அருகில் உள்ள அதிக விட்டமும், அதிக குவிய தூரமும், கொண்ட குவிலென்சு ‘கண்ணருகு லென்சு அல்லது கண்ணருகு வில்லை என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இந்த இரண்டு லென்சுகளும் முன்னும் பின்னும் நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட குறுகலான குழாயினுள் பொருத்தப்பட்டுள்ளன.

Also Read

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!