மாவட்ட ஆட்சி தலைவரின் பங்கினையும் பணிகளையும் விவரிக்க

மாவட்ட ஆட்சியாளர்

  • மாவட்ட நிர்வாகத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியாளர் உள்ளார். 1772ல் வருவாய் வசூலித்தல் மற்றும் நீதி வழங்குதல் ஆகிய இரட்டை நோக்கத்திற்காக, முதல்முதலில் வாரன்ஹேஸ்டிங்ஸ் என்பவரால் மாவட்ட ஆட்சியாளர் பதவி உருவாக்கப்பட்டது.
  • ஆரம்பத்தில் நிலவருவாய் வசூலிப்பதற்காக மட்டுமே மாவட்ட ஆட்சியாளர் இருந்தார். ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியாளருக்கு மிகுதியான பணிகள் உள்ளன.

மாவட்ட ஆட்சியாளரின் பொதுவான பங்குகளும் பணிகளும் பின்வருமாறு

  1. மாவட்ட ஆட்சியாளராக, நில வருவாயை வசூலிப்பதற்கு அவர் கடமைப்பட்டவர்.
  2. மாவட்ட நீதிபதியாக, மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க அவர் கடமைப்பட்டுள்ளார்.
  3. மாவட்ட அலுவலராக, மாவட்டத்திற்குள் சம்பளம், இடமாற்றம் போன்ற பணியாளர் விசயங்களை கவனிக்க அவர் கடமைப்பட்டவர்.
  4. மேம்பாட்டு அலுவலராக, ஊரக மேம்பாட்டுத் திட்டங்களின் அமுலாக்கத்திற்கு பொறுப்புடையவராக அவர் உள்ளார்.
  5. தேர்தல் அலுவலராக, மாவட்டத்தில் பாராளுமன்றம், மாநிலச் சட்டசபை மற்றும் உள்ளாட்சி அரசாங்கம் ஆகியவைகளுக்கு நடத்தப்படும் தேர்தல்களுக்கு அவர் தலைவராக இருக்கிறார். எனவே, மாவட்டத்தில் தேர்தல் பணிகளை அவர் ஒருங்கிணைக்கிறார்.
  6. மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலராக பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளை அவர் நடத்துகிறார்.
  7. தலைமைப் பாதுகாப்பு அலுவலராக, மாவட்டத்தில் மிக முக்கியமானவர்களின் சுற்றுலா மற்றும் தங்குதலில் பாதுகாக்க அவர் கடமைப்பட்டவர்.
  8. ஒருங்கிணைப்பாளராக, மாவட்ட அளவிலான மற்ற பணியாளர்களையும் துறைகளையும் அவர் மேற்பார்வையிடுகிறார்.
  9. மாவட்ட திட்ட அமுலாக்க குழுவிற்கு அவர் தலைமை வகிக்கிறார்.
  10. மாவட்டத்தில் பொது விழாக்களின் போது மாநில அரசாங்கத்தின் அலுவலகப் பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்.
  11. மாநில அரசாங்கத்தின் பொதுமக்கள் தொடர்பு அலுவலராக அவர் செயல்படுகிறார்.
  12. இயற்கைச் சீற்றத்தின் போதும் மற்ற அவசர நிலைகளின் போதும் சிக்கல் தீர்க்கும் தலைமை நிர்வாகியாக அவர் செயல்படுகிறார்.
  13. உள்ளாட்சி அரசாங்க நிறுவனங்களை அவர் மேற்பார்வையிடுகிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார்.
  14. சிவில், பாதுகாப்புத் தொடர்பான பணிகளை அவர் மேற்கொள்கிறார். மற்றும்
  15. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சிவில் விநியோகங்களுக்கு அவர் பொறுப்புடையவராக இருக்கிறார்.

எனவே, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியாளர் பல்வேறு பணிபுரியும் பணியாளராக உள்ளார். உண்மையில், மக்களுக்காக அதிக எண்ணிக்கையுள்ள திட்டங்களை அமுல்படுத்தக் கடமைப்பட்டுள்ள அரசாங்கத்தின் பொதுநல அரசுக் கொள்கைக்கேற்ப, ஒரு மாவட்ட ஆட்சியாளருக்கு அதிகமான பணிப்பளுச் செயல்பாடுகள் உள்ளன. நடைமுறையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பதவி மிக அதிக மதிப்புள்ளதாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நாயகனாக மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!