முதல் உலகப் போரும் இந்திய முதலீட்டாளர்களுக்கு பிரிட்டனின் சலுகையும்

முதல் உலகப் போர் நாட்டைத் தொழில் மயமாக்குவதற்கு ஒரு இடைக்காலத் தடையாய் இருந்தது.

  • முதல் முறையாக, பிரிட்டனின் கிழக்கு நோக்கிய திட்டமிடலுக்கு ஜப்பான் சவாலாய் இருந்தது.
  • பாரம்பரியமிக்க வர்த்தகப் பாதைகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதால் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டிலிருந்த இந்திய முதலீட்டாளர்களுக்கு சில சலுகைகள் வழங்கியது.
  • பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒப்பீட்டுத் தளர்வுக் கட்டுப்பாடு மற்றும் போரினால் கிடைத்த உள்நாட்டுச் சந்தை விரிவாக்கம், தொழில் மயமாக்கலை எளிதாக்கியது.
  • பிரிட்டிஷ் வணிகக் கொள்கையானது உள்நாட்டுத் தொழில்துறையைப் பெரும் எண்ணிக்கை ஆக்கியது.
  • இந்தியாவைத் தொழில்மயமாக்குதல் பிரிட்டிஷ் கொள்கையின் ஒரு பகுதி அல்ல.
  • போர் காலத்தில் பருத்தி மற்றும் சணல் தொழில்கள் அதிக வளர்ச்சியைக் காட்டின.

 தொழிற்துறை ஆணையம் – 1916

  • முதல் முறையாக ஒரு தொழிற்துறை ஆணையம் 1916ல் நியமிக்கப்பட்டது.

நீராவிக் கப்பல் துறை
 சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி – 1919

  • 1919ல் தொடங்கப்பட்ட சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி லிமிடெட் ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது.
  • 1939ல், சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டது.
  • நீராவிக் கப்பல் துறையில் 8 இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

நெசவுத் தொழில்

  • 1923-24ல் ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு, நெசவுத் தொழில் சிறப்பாக செயல்படத் தொடங்கியது.
  • போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், தறிகள் மற்றும் சுழல் அச்சுக்கள் எண்ணிக்கையில் கணிசமாய் உயர்ந்தன.
  • நுகர்வு செய்யப்பட்ட பருத்திப் பொருட்கள் 1929-30களில் இந்தியாவால் 44 சதவீதம் வெளியில் இருந்து 1933-34ல் பெருமந்த நிலைக்குப் பின்னர், 5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
  • வளர்ச்சியைப் பதிவு செய்த ஏனைய இரண்டு தொழில்கள் சர்க்கரை உற்பத்தியும் சிமெண்ட் உற்பத்தியும் ஆகும்.
  • போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கப்பல் தொழிலும் வளர்ச்சியைக் கண்டது.

பொருளாதாரப் பெருமந்தம்

  • 1930களில் தோன்றிய பொருளாதாரப் பெருமந்தம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • 19ம் நூற்றாண்டின் 2ம் பாதியில் இருந்து போர்களுக்கு இடைப்பட்ட காலம் வரை இந்தியாவின் தொழில் வளர்ச்சியானது பிரிட்டனின் எந்த விதமான ஆதரவுமின்றி தொடங்கப்பட்டது.
  • முதல் உலகப் போர் மற்றும் பின்னர் தோன்றிய பெருமந்தம் ஆகியவற்றையும் தாண்டி இந்தியாவின் தொழில் வளர்ச்சியானது உன்னத நிலைமையை அடைந்தது.

  

உலகப் பெரு மந்தமும் இந்தியாவில் அதன் தாக்கமும்

 பங்குச் சந்தை வீழ்ச்சி, மெரிக்காவின் வால் தெரு (Wall Street)

  • உலகப் பெரு மந்த நிலை 1929-39 இருந்து 10 ஆண்டாக நீடித்தப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
  • வட அமெரிக்காவில் பொருளாதாரப் பெரு மந்தமானது தொடங்கியது.
  • அமெரிக்காவில் வால் தெருவில் (Wall Street) உண்டான (அமெரிக்கப் பங்குச் சந்தை அமைந்துள்ள இடம்) பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது. இது இந்தியாவையும் தாக்கியது.
  • தொழில் துறை மையங்களான பம்பாய், கல்கத்தா, கான்பூர், ஐக்கிய மாகாணம், சென்னை ஆகிய இடங்களில் தொழிலாளர் போராட்டம் வெடித்தது.
  • இந்தியத் தொழில் துறைக்குக் கிடைத்த ஒரே நேர்மறைத் தாக்கம் குறைக்கப்பட்ட விலையில் கிடைத்த நிலங்கள் மற்றும் மலிவான ஊதியத்தில் கிடைத்த தொழிலாளர்கள்.
  • பிரிட்டனுடனும் பிற முதலாளித்துவ நாடுகளுடனும் ஏற்பட்ட பலவீனமான உறவுகளால் சில இந்திய தொழில்களில் வளர்ச்சியடைந்தன.
  • ஆயினும் உள்ளூர் நுகர்வுக்கு முக்கியத்துவமளித்த தொழில்கள் மட்டுமே செழித்தோங்கியன.

கிசான் சபாக்கள் – 1930

  • 1929-30ல் 311 கோடியாக இருந்த இந்திய ஏற்றுமதியின் மதிப்பு 1932-33ல் 132 கோடியாகச் சரிந்தது.
  • எனவே, 1930களில் கிசான் சபா தோன்றியது.
  • கிசான் சபாக்கள் குத்தகைக் /வாடகைக் குறைப்புகள், கடன் பிடியிலிருந்து நிவாரணம், ஜமீன்தாரி முறை அகற்றப்படுதல் ஆகியவற்றிற்காகப் போராடியது.

இரண்டாம் உலகப் போரும் இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சியும்

  • 2ம் உலகப் போருடன் ஒரு புதிய கட்ட உற்பத்தி துவங்கி, அது இயந்திர உற்பத்தி, விமானப் போக்குவரத்து, ரயில் பெட்டி, ரயில் எஞ்சின் உற்பத்தி மற்றும் பலவற்றிற்கான உற்பத்தித் தொழில்களாய் விரிவடைந்தது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!