முதல்உலகப்போரின்போது தேசியவாத மற்றும் புரட்சிகரநடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும்நோக்கில் அவசர கிரிமினல்சட்டமாக1915ல் இந்தியப்பாதுகாப்புஒழுங்குமுறைசட்டம் இயற்றப்பட்டது.
இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம்(1915) முதல் முதலில்லாகூர் சதித்திட்ட வழக்கு விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது.
முதல்உலகப்போர் முடிவுற்ற பின்இந்தியப் பாதுகாப்புக்கான சட்டத்தின் அடிப்படை கூறுகளுடன் புதிதாக ரௌலட்சட்டம்உருவானது.
மூன்றுஆணையர்கள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இந்தச் சட்டம் அனுமதித்தது.
இந்தச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை வாழ்நாள் முழுவதற்குமாய் நாடு கடத்துவது, 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை ஆகியவற்றை விதிக்க தீர்ப்பாயத்துக்கு இச்சட்டம் அதிகாரமளித்தது.
வழக்குவிசாரணை ரகசியமாக நடைபெற்றதால் முடிவுகள் மேல் முறையீட்டுக்குத் தகுதி இல்லாதவையாகவும் இருந்தன.