முதல் உலகப் போருக்கு முந்தையஆண்டுகளில் இந்தியாவில் அரசியல் நிலைமை ஒழுங்கற்று இருந்தது.
இந்திய தேசிய அரசியலில் முதல் உலகப் போருக்கு முந்தைய பல நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தின.
1905ல் ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது.
1908ல் இளம் துருக்கியர்களும் 1911ல் சீன தேசியவாதிகளும் மேற்கத்திய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்தி தத்தமது அரசுகளை அகற்றினார்கள்.
முதல் உலகப் போருடன் இந்த நிகழ்வுகளும் 1916 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய தேசியத்துக்கானப் பின்னணியை உருவாக்கின.
சண்டைகள் பல பகுதிகளில் நடந்த போதிலும் இந்தப் போரின் முக்கியக் களமாக ஐரோப்பாவிளங்கியது.
இந்தியா, மொத்தம் 367 மில்லியன் பவுண்டுகளில் 229 மில்லியன்ரொக்கமாகவும்எஞ்சிய 138 பவுண்டு தொகையைப் போர்ச் செலவுகளைச் சமாளிக்க கடனாகவும்வழங்கியது.
இதைத் தவிர இந்தியா 250 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்புக்குப் போருக்கானப் பொருட்களையும் அனுப்பியது.
இதனால் பெருமளவில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டதால் இந்தியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள், தீவிரத் தேசியவாதிகள் என இருவேறு வகைகளில் பிரிந்த காரணத்தாலும் போரின் போது பிரிட்டிஷாரின் நலன்களுக்கு ஆதரவாக முஸ்லிம் லீக் செயல்பட்டதாலும்தேசிய அரசியல் தீவிரமற்று இருந்தது.
இந்தியாவில் புரட்சிகரதேசியசெயல்பாட்டுக்கு உகந்த நிலைமைகளை முதல்உலகப் போர் உருவாக்கியது.
முதல்உலகப் போரில்பிரிட்டனின்சிரமத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த புரட்சியாளர்கள் விரும்பினர். கதார் இயக்கம் அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
1913ல், முஸ்லிம் லீக்கில் முகமது அலி ஜின்னா மற்றும் புதிய தலைவர்கள் சிலர் இணைந்தனர்.
முகமது அலி ஜின்னா முஸ்லிம்களுக்காக அதிக சீர்திருத்தங்களைக் கோரினார்.
1915ல் காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாதிரும்பினார்.