பழங்கால ரோமானிய அரசிலும், நவீன ஆங்கிலேய அரசிலும் தன்னாட்சி இயக்கம்பொதுப்படையான அம்சமாக இருந்தது.
1880களில் அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் முடுக்கம் பெற்றதை அடுத்து அயர்லாந்து அரசு சட்டத்தின் (1920) கீழ் வட அயர்லாந்தின் ஆறு நாடுகளிலும் பிறகு தெற்கில் ஆங்கிலோ– அயர்லாந்து ஒப்பந்தத்தின் (1921) கீழ் எஞ்சிய 26 நாடுகளிலும் தன்னாட்சி அமையப் பெற்றது.
மத்திய அல்லது பிரதேச அரசிடமிருந்து அதனைச் சார்ந்த அரசியல் பகுதிகளுக்கு, அங்கு வாழும் மக்கள் அதற்கு அரசியல்ரீதியாகவிசுவாசமாகஇருப்பார்கள் என்ற நிபந்தனையுடன்வழங்கப்படும்அதிகாரத்தைக்குறிப்பது – தன்னாட்சி.
காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு காரணமாக உருவான அரசியல் வெற்றிடம் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் தன்னாட்சி இயக்கம் தோன்ற வழியமைத்தது.
காந்தியடிகள் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் உள்ளிட்ட அரசியல்இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்கவில்லை.
திலகரின்தன்னாட்சிஇயக்கம்
ஏப்ரல், 1916ல் திலகரின்தன்னாட்சி இயக்கம் பெல்காம் பம்பாய் மாகாண மாநாட்டில்நிறுவப்பட்டது.
பம்பாய் நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியமாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில்திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்பட்டது.
திலகரின் தன்னாட்சி இயக்கத்துக்கு 6 கிளைகள் ஒதுக்கப்பட்டன.
தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக ஜூலை 23, 1916ல் தமது 60வதுபிறந்த நாளில்திலகர் கைது செய்யப்பட்டார்.
பெசண்ட்அம்மையாரின்தன்னாட்சிஇயக்கம்
செப்டம்பர், 1916ம் ஆண்டு மதராஸில்தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசண்ட் தொடங்கினார்.
இந்தியாவின்விசுவாசத்தின்விலை இந்தியாவின்விடுதலை என்று அறிவித்தவர் – அன்னிபெசண்ட்.
ஜூன் 1917ல் ஊட்டிசிறையில்அன்னிபெசண்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் பி.பி.வாடியா, ஜார்ஜ் அருண்டேல் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக அடைக்கப்பட்டனர்.
அன்னிபெசண்ட்க்கு ஆதரவாகஅரசப் பட்டத்தை (knighthood) துறந்தவர் – சர். S. சுப்ரமணியம்.
1917 ஜூலை28ல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் தலைவர்கள் விடுதலை ஆகாவிட்டால்சட்ட மறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து வலியுறுத்தியவர் – திலகர்.
அன்னிபெசண்ட் சிறை பிடித்த நடவடிக்கைகளை ரத்துசெய்யக் கோரிஓராயிரம் நபர்களிடம் கையெழுத்து வாங்க உத்தரவிட்டவர் – காந்தி.
காந்தியடிகளின் உத்தரவின் பேரில்அன்னிபெசண்ட் சிறை பிடித்த நடவடிக்கைகளை ரத்துசெய்யக் கோரி ஓராயிரம் நபர்களிடம் கையெழுத்து வாங்கியவர்கன் – ஜம்னாதாஸ், துவாரகாதாஸ் மற்றும் ஷங்கர் லால் பன்கர்.
1917ஆகஸ்டு 20ல் தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பானஅரசுஎன்பதேஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர் மாண்டேகு அறிவித்தார்.
காங்கிரஸ், முஸ்லிம் லீக், பிரம்ம ஞான சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் எனபலதரப்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட முதல்இந்தியஅரசியல்இயக்கமாக விளங்கியது தன்னாட்சி இயக்கம்.
அன்னிபெசண்டின் தன்னாட்சி இயக்கத்தின் கிளைகள்கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை, அகமதுநகர் ஆகிய இடங்களில் அமைந்தன.
காங்கிரஸ் கட்சியின் செயல்படாத நிலை குறித்து அதிருப்தி அடைந்த மிதவாதிகள் பிரிவு தன்னாட்சிஇயக்கத்தில் இணைந்தனர்.
1917ல் கல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகத் அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தன்னாட்சிஇயக்கத்தின்வீழ்ச்சி
‘Indian unrest’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் – வேலண்டைன் சிரோலி.
செப்டம்பர் 1918ல் வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறுவழக்கை நடத்துவதற்காக திலகர்பிரிட்டனுக்குச் சென்றார்.
மிதவாத தேசியவாதிகள் மற்றும் முஸ்லிம் லீக்கின் ஆதரவைபெறும் நோக்கிலும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கிலும் பிரிட்டிஷார் 1909ல் மிண்டோ– மார்லி சீர்திருத்தங்களை நிறைவேற்றினர்.
மாண்டேகுசெம்ஸ்ஃபோர்டுசீர்திருத்தங்களை அன்னிபெசண்ட் ஏற்றுக்கொண்ட பிறகுதன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.
மாண்டேகு அறிக்கை ஒரே இரவில் அன்னிபெசண்ட் அம்மையாரை ஆங்கிலேய விசுவாசிக்குநிகராக மாற்றியது.
தன்னாட்சி இயக்கத்தின் பெயர் மாற்றம்
இந்தியா தன்னாட்சிபெறுவதற்காகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின்ஆதரவைக் கோருவதற்காகவும் தன்னாட்சி இயக்கம் காமன்வெல்த் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
காமன்வெல்த் லீக் பின்னர் 1929ல் இந்தியலீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1929ல் காமன்வெல்த் லீக்கைஇந்தியலீக் என்று வி.கே. கிருஷ்ணமேனன்பெயர் மாற்றம் செய்தார்.