துருக்கி சுல்தானும் செவ்ரெஸ் ஒப்பந்தமும்
- கலீபா மற்றும் இசுலாமிய புனிதத் தலங்களின் பொறுப்பாளராகத் விளங்கியவர் – துருக்கி சுல்தான்.
- முதல் உலகப் போரில், நேச நாடுகளுக்கு எதிராக முக்கூட்டு நாடுகளுக்கு ஆதரவாக துருக்கி சுல்தான் களம் இறங்கி ரஷ்யாவை தாக்கினார்.
- கலீபாவின் ஆளுமையை முடிவுக்குக் கொண்டுவர துருக்கிய சுல்தான் மீது கூட்டணிப் படைகள் நிர்பந்தித்த ஒப்பந்தம் – செவ்ரெஸ் ஒப்பந்தம்.
- செவ்ரெஸ் ஒப்பந்தத்தின்படி துருக்கியின் கிழக்குப் பகுதியில் இருந்த சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் பிரான்ஸின் கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெற்றன.
- செவ்ரெஸ் ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீனமும் ஜோர்டனும் நாடுகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெற்றன.
கிலாபத் இயக்கம் – 1919
- கலீபாவின் ஆளுமையை முடிவுக்குக் கொண்டுவர கூட்டணிப் படைகள் நிர்பந்தித்த செவ்ரெஸ் ஒப்பந்தத்தால் தொடங்கப்பட்ட இயக்கம் – கிலாபத் இயக்கம்.
- கிலாபத் இயக்கத்தை தொடங்கிய முஸ்லிம் சகோதரர்கள் – முகமது அலி, சௌஹத் அலி.
- ஆட்டோமன் அரசை ஆதரிப்பதையும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு கிலாபத் இயக்கம் தோன்றியது.
- மௌலானா அபுல் கலாம் ஆசாத், M.A. அன்சாரி, ஷேக் ஷௌகத் அலி சித்திக், சையது அதுல்லா ஷா புகாரி ஆகிய பல முஸ்லிம் தலைவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கிலாபத் இயக்க வரையறைகள்
- உருது மொழியில் கிலாப் என்றால் – எதிர்ப்பு
- கிலாபத் விஷயம் பல பிரிவினரால் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது.
- கிலாப்(எதிர்ப்பு) என்பது நிர்வாகத்துக்கு எதிரான பொதுக் கிளர்ச்சியின் அடையாளமாகப் – உத்தரப்பிரதேசம் முஸ்லிம்கள் பயன்படுத்தினர்.
- கிலாப்(எதிர்ப்பு) என்பது நிலப்பிரபுக்களுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்த முஸ்லிம்கள் – மலபார் மாப்பிள்ளைகள்.
கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகள்
- மார்ச் 1920ல் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் பாரிஸ் தூதாண்மை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.
- துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித் தொடர வேண்டும்.
- இசுலாமியப் புனிதத்தலங்கள் சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- சுல்தானிடம் போதுமானப் பகுதிகள் தரப்பட்டு இசுலாமிய மதத்தைப் பாதுகாக்க வழி வகை செய்யப்பட வேண்டும்.
- ஜாசிரத்–உல்–அரப் ஆகியன சுல்தானின் இறையாண்மையின் கீழ் இருக்க வேண்டும்.
- அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம் ஆகியவை இனைந்த பகுதி – ஜாசிரத்–உல்–அரப்.
கிலாபத் இயக்கத்தின் முடிவு
- துருக்கி மக்கள் முஸ்தபா கமால் பாட்சா தலைமையில் கிளர்ந்தெழுந்து சுல்தானிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்து கலிபா என்ற நடைமுறையை ரத்து செய்தன்ர.
- மதமும் அரசியலும் இணைந்து பயணிக்க முடியாது என்று அறிவித்த நிலையில் கிலாபத் இயக்கம் தேவையற்றுப் போனது.
காந்தியடிகளும் கிலாபத் இயக்கமும்
- இந்திய தேசியம் என்ற தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை இணைக்கும் காரணியாகவும் விளங்குவதால் கிலாபத் இயக்கத்திற்க்கு ஆதரவு தெரிவிக்க காந்தியடிகளுக்கு ஊக்கம் கிடைத்தது.
- “கடந்த ஒரு மாத காலமாக நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது கிலாபத் இயக்க விஷயத்தில் ஏகாதிபத்திய அரசு நேர்மையற்ற, நியாயமற்ற வகையிலும் மற்றும் கிரிமினல் போலவும் நடந்துகொண்டதுடன், தங்கள் நேர்மையற்றத் தன்மையைப் பாதுகாக்க தவறுக்கு மேல் தவறு செய்தன. இத்தகைய அரசு மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் இருப்பு வைக்க இயலவில்லை” என கூறியவர் – காந்தி.
- கிலாபத் இயக்கத்தின் தொடர்பில் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் தொடங்கிய போது, தனக்கு வழங்கப்பட்ட்ட அனைத்துப் பதக்கங்களையும் திரும்ப ஒப்படைத்தார்.
கிலாபத் இயக்கத்தை பற்றி கெயில் மினால்டின்
- முழுமையான இந்திய இசுலாமிய அரசியல் மேம்பாட்டுக்கான வழியைத் திறக்க “முழுமையான இசுலாமிய அடையாளம் பயன்பட்டது” எனக் கிலாபத் இயக்கத்தை பற்றி கூறியவர் – கெயில் மினால்டின்.
- ஒத்துழையாமை இயக்கம் 1920-22
- அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) – 1920
- அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு
- சுயராஜ்ய கட்சி – 1923
- சைமன் குழு – நேரு அறிக்கை- லாகூர் காங்கிரஸ் மாநாடு