Contents show
சுதேசி – காந்தி மற்றும் ரானடே கருத்துரைகள்
- ‘சுதேசி‘ என்பதன் பொருள்’ – ஒருவரது சொந்த நாடு.
- “ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மன நிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்” என்று ரானடே கூறினார்.
- “சுதேசி என்பது நமக்குள்ளிருக்கும் ஆன்ம பலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப் புறத்திலிருந்து கிடைக்கும் பயன்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் வண்ணம் இங்கு உள்ளவர்களால் தயார் செய்யப்படும் பொருட்களை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்” – காந்தி.
சுதேசி இயக்கம் – 1905
- ஆகஸ்டு 7, 1905ல் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
- சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்ட இடம் – கல்கத்தா நகர அரங்கில் (Town Hall)
- ஜூலை 19, 1905ல் அதிகார பூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாளை துக்க தினமாக கடைபிடிக்க அறிவிக்கப்பட்டது.
- மக்கள் கங்கையில் நீராடி வந்தே மாதரம் பாடலை பாடிக்கொண்டு ஊர்வலம் சென்றனர்.
சுதேசி இயக்கம் – சுப்பிரமணியம் மற்றும் கோகலே கருத்துரை
- சுதேசி இயக்கமானது “தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி” என்று கூறியவர் – சுப்பிரமணியம்.
- “சுதேசி இயக்கமானது நம்முடையத் தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல, நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்குமானது” – கோபால கிருஷ்ண கோகலே.
ஆக்கபூர்வமான சுதேசி – ரவீந்திரநாத் தாகூர்
- ஆக்கபூர்வமான சுதேசி திட்டம் சுய உதவிக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தது.
- மக்கள் தங்களைச் சுய வலிமை உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டிய தேவைக்கு சுய உதவி (ஆத்ம சக்தி) முக்கியத்துவம் வழங்கியது.
- சுய உதவி (ஆத்ம சக்தி) எனும் ஆக்கத் திட்டத்தினை கோடிட்டுக் காட்டியவர் – ரவீந்திரநாத் தாகூர்
- ரவீந்திரநாத் தாகூர் சுய உதவி (ஆத்ம சக்தி) எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்களை (திருவிழா) பயன்படுத்த அழைப்பு விடுத்தார்.
- சுதேசி இயக்கம் 1905
- இந்திய பணியாளர் சங்கம் 1905
- சூரத் பிளவு – 1907
- புரட்சிகர தேசியவாதம்
- இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)