“ஒருவரது சொந்த நாட்டில்உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவானமன நிறைவைக்கொடுத்தபோதிலும்முன்னுரிமை வழங்கப்படல்வேண்டும்” என்று ரானடே கூறினார்.
“சுதேசி என்பது நமக்குள்ளிருக்கும்ஆன்ம பலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப் புறத்திலிருந்து கிடைக்கும் பயன்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் வண்ணம் இங்குஉள்ளவர்களால்தயார்செய்யப்படும்பொருட்களைமட்டுமேநாம்பயன்படுத்த வேண்டும்” – காந்தி.
சுதேசி இயக்கம் – 1905
ஆகஸ்டு 7, 1905ல் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்ட இடம் – கல்கத்தா நகர அரங்கில் (Town Hall)
ஜூலை 19, 1905ல்அதிகாரபூர்வமாகவங்காளம்பிரிக்கப்பட்ட நாளை துக்க தினமாக கடைபிடிக்க அறிவிக்கப்பட்டது.
மக்கள் கங்கையில் நீராடி வந்தே மாதரம் பாடலை பாடிக்கொண்டு ஊர்வலம் சென்றனர்.
சுதேசி இயக்கம் – சுப்பிரமணியம்மற்றும்கோகலே கருத்துரை
சுதேசிஇயக்கமானது “தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்புநிலைக்குஎதிரானபுரட்சி” என்று கூறியவர் – சுப்பிரமணியம்.
“சுதேசிஇயக்கமானது நம்முடையத் தொழில்களின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல, நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்குமானது” – கோபால கிருஷ்ண கோகலே.
ஆக்கபூர்வமான சுதேசி – ரவீந்திரநாத் தாகூர்
ஆக்கபூர்வமானசுதேசி திட்டம் சுயஉதவிக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தது.
மக்கள் தங்களைச்சுய வலிமை உள்ளவர்களாகஆக்கிக்கொள்ளவேண்டிய தேவைக்கு சுய உதவி (ஆத்ம சக்தி) முக்கியத்துவம் வழங்கியது.
சுய உதவி (ஆத்ம சக்தி) எனும் ஆக்கத் திட்டத்தினை கோடிட்டுக் காட்டியவர் – ரவீந்திரநாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூர்சுய உதவி (ஆத்ம சக்தி) எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்களை (திருவிழா) பயன்படுத்த அழைப்புவிடுத்தார்.