தண்டி யாத்திரை – 1930
- சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் தண்டி யாத்திரையை அறிவித்தார்.
- உப்பு மீது அநியாய வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டி யாத்திரை நடந்த்து.
- காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ள தண்டி வரை 375 கிலோ மீட்டர் தொலைவுக்குத் தண்டி யாத்திரை நடைபெறது.
- 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் யாத்திரையாக நடந்து.
- தண்டியை 25 ஆவது நாளில் அதாவது 1930 ஏப்ரல் 6ல் சென்று அடைந்தார்.
- தண்டி யாத்திரை செய்திகளை பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன.
- சட்டமறுப்பு இயக்கத்தின் காரணமாக காந்தியடிகள் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் – 1930
- தமிழ்நாட்டில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக யாத்திரை இராஜாஜி தலைமையில் நடந்தது.
- திருச்சிராப்பள்ளியில் தொடங்கி தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை 150 மைல்கள் இந்த நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1930ல் தான் இராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
- வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக யாத்திரை 1930 ஏப்ரல் 13ல் தொடங்கி ஏப்ரல் 28ல் முடிவடைந்தது.
- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜெ.ஏ. தாரன் எச்சரிக்கை விடுத்தார்.
கும்பகோணம், செம்மங்குடி, திருத்துறைப்பூண்டி, ஆகிய வழியாக வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத் ஊர்வலம் சென்றது