தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்

  • தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்-இ-ஹிந்த் தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
  • 1899-1900களில் போரின் போது தூக்கு படுக்கை (Stretcher) கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக காந்தியடிகளுக்கு போயர் போர் வெள்ளிப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
  • ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச் செயல்பட்ட சேவைகளைப் பாராட்டி காந்தியடிகளுக்கு 1906-ல் ஜுலு போர் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

காந்தியின் சேவைக்கான பதக்கங்கள்

  • 1899-1900 தூக்கு படுக்கை –    போயர் போர் வெள்ளிப் பதக்கம்
  • துணைக் கண்காணிப்பாளர்    –    போயர் போர்
  • தென்னாப்பிரிக்கா மனிதாபிமானப் பணி     –  கெய்சர்-இ-ஹிந்த் தங்கப் பதக்கம்
  • 1906 ஆம்புலன்ஸ் படை ஆர்வலர் அதிகாரி –   ஜுலு போர் வெள்ளிப் பதக்கம்
  • காந்தியடிகளின் தலைமையில் புதிய வடிவிலான ஆர்ப்பாட்டத்தை தொடங்கும் களத்தை முதல் உலகப் போர் மறைமுகமாக உருவாக்கியது.
  • காந்தியடிகள் தனது முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை தென்னாப்பிரிக்காவில் நடத்தினார்.
  • சத்யம் (உண்மை), அஹிம்சை (வன்முறை அற்ற தன்மை) ஆகியவற்றின் அடிப்படையிலான சத்தியாகிரகப் போராட்டத்தைப் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது படிப்படியாக உருவாக்கினார்.
  • காந்தியடிகள் 20 ஆண்டுகள் இந்தியாவை விட்டு வெளியே இருந்தார்.

காந்தியடிகள் இந்தியா திரும்புதல் – 1915

  • தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக முன்னர் ஆதரவு திரட்டிய போது காந்தியடிகளுக்கு இந்தியத் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்.
  • காந்தியடிகள் கோபாலகிருஷ்ண கோகலேவை தனது அரசியல் குருவாக ஏற்றார்.
  • 1915ல் காந்தியடிகள் இந்தியா திரும்பினார்.
  • கோகலேவின் அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பிய உடன் நாட்டின் நாடு முழுவதும் ஓராண்டு காலத்துக்குப் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார்.
  • குஐராத் மாநலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
  • தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களில் காந்தியடிகள் தீவிரமாக பங்கேற்கவில்லை.

Read Related Topics

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!