- பழங்கால ரோமானிய அரசிலும், நவீன ஆங்கிலேய அரசிலும் தன்னாட்சி இயக்கம் பொதுப்படையான அம்சமாக இருந்தது.
- 1880களில் அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் முடுக்கம் பெற்றதை அடுத்து அயர்லாந்து அரசு சட்டத்தின் (1920) கீழ் வட அயர்லாந்தின் ஆறு நாடுகளிலும் பிறகு தெற்கில் ஆங்கிலோ– அயர்லாந்து ஒப்பந்தத்தின் (1921) கீழ் எஞ்சிய 26 நாடுகளிலும் தன்னாட்சி அமையப் பெற்றது.
- மத்திய அல்லது பிரதேச அரசிடமிருந்து அதனைச் சார்ந்த அரசியல் பகுதிகளுக்கு, அங்கு வாழும் மக்கள் அதற்கு அரசியல் ரீதியாக விசுவாசமாக இருப்பார்கள் என்ற நிபந்தனையுடன் வழங்கப்படும் அதிகாரத்தைக் குறிப்பது – தன்னாட்சி.
- காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு காரணமாக உருவான அரசியல் வெற்றிடம் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் தன்னாட்சி இயக்கம் தோன்ற வழியமைத்தது.
- காந்தியடிகள் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்கவில்லை.
Contents show
திலகரின் தன்னாட்சி இயக்கம்
- ஏப்ரல், 1916ல் திலகரின் தன்னாட்சி இயக்கம் பெல்காம் பம்பாய் மாகாண மாநாட்டில் நிறுவப்பட்டது.
- பம்பாய் நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய மாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்பட்டது.
- திலகரின் தன்னாட்சி இயக்கத்துக்கு 6 கிளைகள் ஒதுக்கப்பட்டன.
- தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக ஜூலை 23, 1916ல் தமது 60வது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார்.
பெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம்
- செப்டம்பர், 1916ம் ஆண்டு மதராஸில் தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசண்ட் தொடங்கினார்.
- இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அறிவித்தவர் – அன்னிபெசண்ட்.
- ஜூன் 1917ல் ஊட்டி சிறையில் அன்னிபெசண்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் பி.பி.வாடியா, ஜார்ஜ் அருண்டேல் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக அடைக்கப்பட்டனர்.
- அன்னிபெசண்ட்க்கு ஆதரவாக அரசப் பட்டத்தை (knighthood) துறந்தவர் – சர். S. சுப்ரமணியம்.
- 1917 ஜூலை 28ல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் தலைவர்கள் விடுதலை ஆகாவிட்டால் சட்ட மறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து வலியுறுத்தியவர் – திலகர்.
- அன்னிபெசண்ட் சிறை பிடித்த நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி ஓராயிரம் நபர்களிடம் கையெழுத்து வாங்க உத்தரவிட்டவர் – காந்தி.
- காந்தியடிகளின் உத்தரவின் பேரில் அன்னிபெசண்ட் சிறை பிடித்த நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி ஓராயிரம் நபர்களிடம் கையெழுத்து வாங்கியவர்கன் – ஜம்னாதாஸ், துவாரகாதாஸ் மற்றும் ஷங்கர் லால் பன்கர்.
- 1917 ஆகஸ்டு 20ல் தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர் மாண்டேகு அறிவித்தார்.
- காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் முதன் முதலில் ஈடுபட்டோரில் பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள்.
- காங்கிரஸ், முஸ்லிம் லீக், பிரம்ம ஞான சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் என பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட முதல் இந்திய அரசியல் இயக்கமாக விளங்கியது தன்னாட்சி இயக்கம்.
- அன்னிபெசண்டின் தன்னாட்சி இயக்கத்தின் கிளைகள் கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை, அகமதுநகர் ஆகிய இடங்களில் அமைந்தன.
- காங்கிரஸ் கட்சியின் செயல்படாத நிலை குறித்து அதிருப்தி அடைந்த மிதவாதிகள் பிரிவு தன்னாட்சி இயக்கத்தில் இணைந்தனர்.
- 1917ல் கல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகத் அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி
- ‘Indian unrest’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் – வேலண்டைன் சிரோலி.
- செப்டம்பர் 1918ல் வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கை நடத்துவதற்காக திலகர் பிரிட்டனுக்குச் சென்றார்.
- மிதவாத தேசியவாதிகள் மற்றும் முஸ்லிம் லீக்கின் ஆதரவை பெறும் நோக்கிலும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கிலும் பிரிட்டிஷார் 1909ல் மிண்டோ– மார்லி சீர்திருத்தங்களை நிறைவேற்றினர்.
- மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை அன்னிபெசண்ட் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.
- மாண்டேகு அறிக்கை ஒரே இரவில் அன்னிபெசண்ட் அம்மையாரை ஆங்கிலேய விசுவாசிக்கு நிகராக மாற்றியது.
தன்னாட்சி இயக்கத்தின் பெயர் மாற்றம்
- இந்தியா தன்னாட்சி பெறுவதற்காகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதற்காகவும் தன்னாட்சி இயக்கம் காமன்வெல்த் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- காமன்வெல்த் லீக் பின்னர் 1929ல் இந்திய லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1929ல் காமன்வெல்த் லீக்கை இந்திய லீக் என்று வி.கே. கிருஷ்ணமேனன் பெயர் மாற்றம் செய்தார்.