முதல் வட்ட மேசை மாநாடு – 1930
- சைமன் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
- சைமன் குழு அறிக்கையை காங்கிரஸ், இந்து மகாசபை, முஸ்லிம் லீக் ஆகியன புறக்கணித்தன.
- சைமன் குழு அறிக்கையைச் சட்டப்பூர்வமாக ஆக்கும் நோக்கில் லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்ட விருப்பதாக அரசு அறிவித்தது.
- முதல் வட்ட மேசை மாநாட்டை காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாகக் அறிவித்தது.
சட்டமறுப்பு இயக்க முடிவு – காந்தி–இர்வின் ஒப்பந்தம் – 1931
- உலகம் தழுவிய விளம்பரத்தை சட்டமறுப்பு இயக்கம் தந்தது.
- சட்டமறுப்பு இயக்கத்தை முடித்து வைக்க அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் வழி காண விரும்பினார்.
- ஜனவரி 1931ல் காந்தியடிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
- காந்தியடிகளும் இர்வின் பிரபுவும் ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- சத்தியாகிரக பிரச்சாரத்தைக் கைவிட காந்தியடிகள் உறுதி ஏற்றார்.
- காந்தி–இர்வின் ஒப்பந்தம் 1931 மார்ச் 5ல் கையெழுத்தானது.
- இந்தியாவில் சட்டமறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக காந்தி–இர்வின் ஒப்பந்தம் அமைந்தது.
- காந்தி–இர்வின் ஒப்பந்தத்தைக் கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ஏற்றுக்கொண்டது.
- பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் மறுத்துவிட்டார்.
- சட்டமறுப்பு இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய இர்வின் ஒப்புக்கொண்டார்.
இரண்டாவது வட்ட மேசை மாநாடு – 1931
- 1931 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் காங்கிரஸின் ஒரே யொருப் பிரதிநிதியாக காந்தியடிகள் கலந்து கொண்டார்.
- உப்பை சுய பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மக்களை அனுமதிப்பது, வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, சாராயம் மற்றும் அந்நியத் துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது ஆகியவற்றுக்கு அரசு இணக்கம் தெரிவித்தது.
இரண்டாவது வட்ட மேசை மாநாடு தோல்வி – மீண்டும் சட்டமறுப்பு இயக்கம்
- காந்தியடிகள் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட போதும் அவரது கோரிக்கைகளை ஏற்க முன்வராமல் அரசு பிடிவாதம் செய்தது.
- காந்தியடிகள் வெறும் கையோடு திரும்பியதை அடுத்து மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தை கையில் எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானித்தது.
- பொருளாதார வீழ்ச்சி காரணமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை இடதுசாரிகள் முன்னின்று நடத்தினார்கள்.
- நேரு, கான் அப்துல் கபார் கான், இறுதியில் காந்தியடிகள் என அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
- இந்தப் போராட்டத்தில் மக்கள் மீது தீவிர வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு – 1932
- லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சுகள் தோல்வி அடைந்தன.
- இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின் போது காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே இதே கருத்துக் குறித்து விவாதம் நடந்தது.
- பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று இந்த கருத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
- ஆகஸ்ட் 1932ல் வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.
- இட ஒதுக்கீட்டுடன் கூடிய தனித்தொகுதிகள் பற்றிய அம்பேத்கரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
பூனா ஒப்பந்தம் – 1932
- தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்க்கப் போவதாக மிகவும் வருத்தத்துடன் காந்தியடிகள் அறிவித்தார்.
- தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து காந்தியடிகள் தான் அடைக்கப்பட்ட எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
- காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது.
- எரவாடா சிறைச் சாலையில் அம்பேத்கர் காந்தியடிகளுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடு திருத்தப்பட்டது.
- 1932ல் அம்பேத்கர் மற்றும் காந்தியடிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
- தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகளைப் பறித்துக் கொண்டாலும் இடங்களின் ஒதுக்கீடு குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
- இடஒதுக்கீடு பெற்ற தொகுதிகள் என்ற சட்ட அம்சம் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டு திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்திலும் இது இடம் பெற்றது.
சட்டமறுப்பு இயக்கம் முடிவு
- மீண்டும் சட்டமறுப்பு இயக்கம் மெதுவாக மந்த நிலை அடைந்து மே 1933ல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.
- சட்டமறுப்பு இயக்கம் பின்னர் மே 1934ல் முற்றிலும் முடிவுக்கு வந்தது.
மூன்றாம் வட்ட மேசை மாநாடு – 1932
- சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம்
- டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்
- கான்பூர் சதி வழக்கு – 1924
- பகத் சிங்
- சூரியா சென் & கல்பனா தத்