இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் – 1915

  • முதல் உலகப் போரின் போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக 1915ல் இந்தியப் பாதுகாப்பு ஒழுங்கு முறை சட்டம் இயற்றப்பட்டது.
  • இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம்(1915) முதல் முதலில் லாகூர் சதித்திட்ட வழக்கு விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது.
  • முதல் உலகப்போர் முடிவுற்ற பின் இந்தியப் பாதுகாப்புக்கான சட்டத்தின் அடிப்படை கூறுகளுடன் புதிதாக ரௌலட் சட்டம் உருவானது.
  • மூன்று ஆணையர்கள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இந்தச் சட்டம் அனுமதித்தது.
  • இந்தச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை வாழ்நாள் முழுவதற்குமாய் நாடு கடத்துவது, 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை ஆகியவற்றை விதிக்க தீர்ப்பாயத்துக்கு இச்சட்டம் அதிகாரமளித்தது.
  • வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெற்றதால் முடிவுகள் மேல் முறையீட்டுக்குத் தகுதி இல்லாதவையாகவும் இருந்தன.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!