லக்னோ ஒப்பந்தம் -1916

லக்னோ மாநாடு – காங்கிரஸ் ஒன்றினைவு – 1916

  • 1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர் – அம்பிகா சரண் மஜும்தார்.
  • லக்னோ மாநாட்டிற்கு தலைமை ஏற்ற அம்பிகா சரண் மஜும்தார் தீவிர தேசிய தலைவர்களை வரவேற்றார்.
  • பத்தாண்டு கால வலி தந்த பிரிவுக்குப் பிறகு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிப் பிரிந்தால் அனைவருக்கும் தாழ்வு என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் உணர்ந்து, சகோதரர்கள் தங்களுடைய சகோதரர்களைக் கடைசியில் சந்தித்துவிட்டனர்…” எனக் கூறியவர்அம்பிகா சரண் மஜும்தார்.

லக்னோ ஒப்பந்தம் – 1916

  • 1916ஆம் ஆண்டு காங்கிரஸ், முஸ்லிம் லீக், தன்னாட்சி இயக்கம் ஆகியன தங்களுடைய வருட மாநாடுகளை லக்னோவில் நடத்தியதால் முக்கியத்துவம் பெற்றது.
  • அக்டோபர் 1916ல் இம்பீரியல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் போருக்குப் பிந்தைய சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்தினர்.
  • 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் சந்தித்து இந்த கடிதம் குறித்து விவாதித்தன.
  • சட்டப்பேரவையின் கட்டமைப்பு, போருக்குப் பிந்தைய சூழலில் இரண்டு சமூகங்களுக்கும் அனுமதிக்கப்பட வேண்டிய பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை ஆகியன குறித்து இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன.
  • இதற்கு இணையாகத் திலகரும் அன்னிபெசண்ட் அம்மையாரும் தன்னாட்சி குறித்து அறிவுறுத்தினர்.
  • நவம்பர் 1916ல் கல்கத்தாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் டிசம்பர் 1916ல் நடந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் வருடாந்திர மாநாடுகளில் உறுதி செய்யப்பட்டன.
  • காங்கிரஸ்லீக் ஒப்பந்தம் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒப்பந்தம் – லக்னோ ஒப்பந்தம்.
  • லக்னோ ஒப்பந்தத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்-ஐ ஒன்றிணைப்பதில் அன்னிபெசண்ட் அம்மையாரும் திலகரும் முக்கியப் பங்காற்றினார்கள்.

லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள்

  • இந்துமுஸ்லிம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்துக்கும் வழிவகுத்தது – லக்னோ ஒப்பந்தம்.
  • லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பிஜின்னா.
  • இந்துமுஸ்லிம் ஒற்றுமையின் தூதர்” – ஜின்னா என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
  • மத்திய மற்றும் மாகாண சட்ட மேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்
  • மத்திய மற்றும் மாகாண சட்டப் பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குப் பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்க வேண்டும்.
  • மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது.
  • தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்க கடமைப்பட்டுள்ளன
  • கவர்னர் ஜெனரல் அல்லது ஆளுநர் சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.
  • இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி (டொமினியன்) தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்கவேண்டும்.
  • ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சமநிலை பெற்றிருக்க வேண்டும்.
  • காங்கிரஸ் மற்றும் லீக்கில் இருந்த படித்த வகுப்பினர் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை லக்னோ உடன்படிக்கையானது நிரூபித்தது.
  • இந்த ஒற்றுமை கிலாஃபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது அதன் உச்சத்தை அடைந்தது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!